Thursday, 24 December 2020

‘‘தீமைகளின் பிறப்பிடம் – 2020.!”

【 ஜுமுஆ பேருரையாற்றுகின்ற நாம் தற்போதைய‌ நாட்டு நடப்புகளை தெறிந்து கொள்வது மிக அவசியமாகும்.】

【 புத்தாண்டு சம்பந்தமாக‌ தற்போதைய செய்தி:】சென்னையில் 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.

இல்லை. இதுபோன்ற பல கட்டுப்பாடுகள் வழக்கம் போல இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலும் விதிக்கப்பட உள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிவடைந்ததும் நாளை மறுநாள் 26-ந்தேதியில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஒவ்வொரு ஆண்டும் போலீசார் வெளியிடுவார்கள். இந்த ஆண்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகள் தயாராகி உள்ளன. வருகிற 30 அல்லது 31-ந்தேதிகளில் இதுதொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

மெரினா கடற்கரையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 31-ந்தேதி அன்று இரவு ஒரு லட்சம் பேர் வரையில் கூடுவார்கள். இரவு 12 மணியானதும் ஹேப்பி நியூ இயர் கோ‌ஷம் விண்ணை பிளக்கும்.

பொதுமக்களோடு சென்னை போலீஸ் கமி‌ஷனர் கேக் வெட்டி கொண்டாடுவார். பொதுமக்களுக்கு போலீசார் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். மெரினா கடற்கரையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சாலையில் தடுப்புகளும் அமைக்கப்பட உள்ளன.

தென்சென்னை கூடுதல் கமி‌ஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் அடையாறு துணை கமி‌ஷனர் பகலவன் தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்கும் வகையில் தடுப்புகளையும் அமைக்க உள்ளனர்.

31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஓட்டல்கள் தயாராகி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசாரும் ஆயத்தமாகி உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

♣ முன்னுரை: المقد مة INTRODUCTION & துவக்கவுரை:-

அன்புள்ளவர்களே! புது வருடத்தை வரவேற்க கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?.

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விடுகிறது. அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது எவ்வகையிலும் அறிவுப்பூர்வமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டு, அதை சீர்தூக்கிப் பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே புத்திசாலியான முஸ்லிமாக இருக்க முடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத் தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் கிறிஸ்துவ மதத்தவர்களின் (காலண்டரான) ஜனவரி முதல் தேதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?.

அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் அழிவு நாளின் அறிகுறிகளாக எச்சரித்த ஒரு விஷயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

இந்தப் புத்தாண்டை (?) வரவேற்க உலகெங்கும் டிசம்பர் 31 ஆம் நாள் நடக்கும் கூத்துகளும் கேளிக்கைகளும் வீண் விரயங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. சென்னை போன்ற கடற்கரையின் நிலைமை மிக மிக மோசம். மதுக் கடைகளிலும் பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மதுவிருந்துடன் இரவில் புத்தாண்டை வரவேற்கின்றது ஒரு கூட்டம். மறுநாள் (அதாவது) ஜனவரி 1 காலையில் கோயில்களிலும் தேவாலயங்களிலும் அதே கூட்டத்தைப் பக்திப் பரவசத்துடன் காண முடிகிறது.

ஆண்டுதோறும் இந்தக் கூத்துகள் வாடிக்கையாகி விட்டன. மக்களும் இதனைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்! வாருங்கள்….

ஆக இப்போது புத்தாண்டை கொன்டாடுவதின் தீமைகளை பற்றியும், அந் நாளில் இறை பொருத்தம் பெற நாம் செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், வாழ்கையே வணக்கமாக ஆக்கும் முயற்சிகளை இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்….

♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى Allah says in the Qur’an:

தக்வோடு வாழு!! மன இச்சை வேண்டாம்…

 لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ‌ؕ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ لِّلْاَبْرَارِ‏

ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும். (அல்குர்ஆன்: 3:198)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன்: 3:200)

நபி ஸல் அவர்களின் சொல்–செயல் அங்கீகாரம் ஆகியவற்றை அன்புடன் பின்பற்றுவோ மேயானால் மூன்று விதமான பயன்கள் கண்டிப்பாக கிடைக்கும்.

1.நமது பாவங்கள் மன்னிக்கப்படும் .
2.அல்லாஹ்வின் அன்பு கிடைக்கும் .
3.மறுமையில் சுவனம் கிடைக்கும் .

இந்த மூன்று பயன்களும் ஒரு மனிதருக்கு கிடைத்து விட்டால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم The Prophet ﷺ said:

இளைஞர்களே புத்தாண்டு வேண்டாம் அர்ஷின் நிழல் வேண்டும்….

“‏إن الله جميل يحب الجمال،‏”‏‏.‏‏(‏‏(‏رواه مسلم‏)‏‏

“ நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அழகை விரும்புகிறான்.

عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ وَّشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْـمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَّجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّي لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللهَ خَالِياً فَفَاضَتْ عَيْنَاهُ.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமில்லாத (கியாமத்) நாளில் தனது ரஹ்மத் என்னும் நிழலில் ஏழு வகையான மனிதர்களுக்கு இடம் அளிப்பான். அவர்கள்,

1. நீதியுள்ள அரசன்,
2. அல்லாஹ்வுடைய வணக்கத்தில் வாலிபத்தைக் கழித்த வாலிபன்,
3. எந்நேரமும் பள்ளியில் உள்ளத்தை லயிக்கச் செய்தவர்,
4. அல்லாஹ்வுக்காகவே நேசம் கொண்டு அவனுக்காகவே ஒன்று கூடி அவனுக்காகப் பிரியும் இரு நபர்கள்,
5. உயர் குலத்தைச் சேர்ந்த அழகிய பெண் ஒருத்தி தன்பால் அழைக்க, நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று கூறியவர்,
6. தனது இடக்கரத்திற்குத் தெரியாத நிலையில் தானம் செய்தவர்,
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்தியவர்.
(அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி)நூல்: புகாரி – 6806 )

【புத்தாண்டு கொண்டாட்டமும்.. பெற்றோர்களின் திண்டாட்டமும்…】

அல்லாஹ் [ﷻ] தன் திருமறையில் கூறுகிறான்:

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ وَاَحْسِنُوْا  ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.”.அல்குர்ஆன் 2:195

இதெல்லாம் இன்று! பக்தி மறந்து, பாதை தவறி பலவழியில் செல்லும் ஆண்களும், பெண்களும் அறிந்து கொள்ளவேண்டியது. அதை கீழே பார்ப்போம்.

புது வருடம் பிறந்து விட்டது, என்று இளையவர்கள் முதல் முதியவர்கள் வரைக்கும் இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம் எனும் ஒழுக்க கேட்டு பைத்தியம், நமது மனித குலத்தை பெரிதும் பாதித்து கொண்டு இருக்கிறது என்றால்! அது மிகையாகாது!

இந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எல்லா சமுதாய மக்களும் பங்கெடுப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. அனைவரின் வாயிலிலும், தொலை பேசியிலும், அலைபேசியிலும், எஸ்.எம்.எஸ். சிலும் இன்னும் நேரிலும் சொல்லக் கூடிய ஒரே வார்த்தை! “புத்தாண்டு வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR” என்ற முழக்கம்.

இதை சொல்லுவதினால் என்ன பயன்? இதில் ஏதாவது அர்த்தங்கள் அடங்கி உள்ளதா? அல்லது இந்த வார்த்தையினால் ஏதாவது நன்மை பயக்குமா? அல்லது புத்தாண்டு பிறந்து விட்டால் உலகில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா? அல்லது ஒழுக்கம் சீர்தூக்குமா? அல்லது இளைய சமுதாய சிந்தனை புரட்சி ஏற்படுமா? ஒன்றுமே ஏற்ப்படப் போவதில்லை இந்த புத்தாண்டினால்! இதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

மேலும், எப்பொழுதும் போல் ஆண்டு வரும், ஆண்டு போதும் இது இயற்க்கை. இதில் என்ன விந்தையான பிறப்பு இருக்கிறது இந்த புத்தாண்டு கொண்டாடு வதற்கு? ஆண்டு தொடங்கினால்! பிறப்பு என்று கொண்டாடுகிறீர்கள், ஒரே நொடியில் ஆண்டு தொடங்குவதினால் “புத்தாண்டு பிறந்து விட்டது” என்றால்! அதே ஒரு நொடி முன்பு சென்ற ஆண்டு இறந்து விடுகின்றதே! அதற்க்கு என்ன செய்வீர்கள்?

அதிகமான சமுதாயங்கள் ஆண்டு பிறப்புக்கு கொண்டாடும் போது, ஆண்டு இறப்புக்கும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது தானே! சென்ற ஆண்டு தான் இறந்து விடுகின்றதே! அதற்க்கு துக்கம் அனுஷ்டிக்க கூடாதா? துக்கம் அனுஷ்டிப்பது உங்கள் கலாச் சாரத்தில் இல்லாததுவா? சிந்திக்க வேண்டாமா? இதற்க்கு மட்டும் நமது அறிவு ஏற்க்க மறுக்கிறது! ஆனால் புது வருடத்திற்கு மட்டும் பிறந்தநாள் கொண்டாட அறிவு ஏற்கிறது இது நியாயமா?

ஆண்டு ஓடினால்! வயது மூப்பு தான் வரும். இது நியதி. பின்பு ஏன் இந்த கொண்டாட்டம்? ஏன் இந்த அந்நிய நாட்டு கலாச்சாரம்? ஏன் இந்த ஒழுக்க சீர்கேடு?, ஏன் இந்த மானக் கேடான பரிவர்த்தனை? இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தினால் எவ்வளவு கேடு இருக்கிறதென்று தெரியுமா? இதனால்! நாம் அறிவை தொலைப்பது மட்டு மல்லாது! நம் கலாச்சார பண்புகளை உதாசீனப் படுத்தி எல்லை மீறி நடக்க வேண்டியதாகிறது.

ஆம், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பேரில் நடக்கும் கூத்துக்கள் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்கள் மத்தியிலும் புழுதி வாரி தூற்றுகிறது. இரவு விடுதியில் (STAR HOTELS) கேபரே டான்ஸ் என்னும் பிறநாட்டு கலாச்சார நடனம் ஆடி! ஆண்களும், பெண்களும் மது அருந்துவதொடு, கையைப் பிடித்து நடனம் என்று இருவரும் ஆரம்பித்து, பின்பு மதுவின் மயக்கம் தலைக் கேரியதும், தலையை விரித்துப் போட்டு ஒருவருக் கொருவர் கட்டி அணைத்து முத்தங்கள் கொடுப்பது, ஆடைகளை நழுவ விடுவது, ஆபாசமான வார்த்தைகள் பரிமாற்றப் படுவது, ஆரவாரத் தோடு கூச்சலிடுவது, சப்தமாக இசை கேட்பது, இது போன்ற செயல்கள் நடப்பது இந்த மாதிரி கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் கேளிக்கை என்னும் கூத்தினால் தான்.

அத்தோடு இந்த கொண்டாட்டம் முற்றுப் பெறுமா? பெறாது. தொடர்ந்து அதிகாலை வைகறை பொழுது வரைக்கும் இந்த ஆபாச அணி வகுப்புகள் அரங்கேறிக் கொண்டே இருக்கும். மங்கையின் நினைவிலும், மதுவின் மயக்கத்திலும் மதி மயங்கி, வீடு வந்து சேர்வதற்குள் மரணம் கூட சம்பவிக்க நேரிடுகிறது. காரணம், அந்த போதையில் வாகனம் ஒட்டிக் கொண்டு தாறு மாறாக வருவதினாலும், அல்லது அருகில் பெண்ணோ அல்லது ஆணோ துணையோடு வரும் சமயம் சில்மிஷத்தில் ஈடுபடுவதினாலும் இந்த மாதிரியான அசம்பா விதங்கள் நடக்கின்றன, நடந்து கொண்டும் இருக்கிகின்றன! அதை நாம் கண் கூடாக கண்டும் இருக்கிறோம், மற்றும் தினசரி பத்திரிக்கையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அத்தோடு நின்று விடுமா? இந்த புத்தாண்டு கொண்டாட்டம்! நள்ளிரவு பூஜை என்று தொடங்கி, குடும்ப பெண்களின் கற்புக்கள் சூறையாடப் படுகின்றன. வினோத விபச்சாரங்கள் வீதியில் உலா வருகின்றன, சட்டம் ஒழுங்குகள் சீர் கெடுகின்றன, பொருளாதாரம் வீண் விரயம் ஆகின்றன, இதை எல்லாம் அரசாங்கமும் வேடிக்கை பார்ப்பதுதான் விந்தையாக இருக்கின்றது. அது மட்டுமா! இதை அங்கீகரிப்பது போல் அவர்களும் தன் பங்கிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி மகிழ்கின்றனர். படித்தவர்களுக் கிடையில் இப்படியும் பரிவர்த்தனம் நடக்கிறதே என்று நினைக்கும் போது! வேதனையாக இருக்கின்றது.

இவர்களின் பெற்றோர்கள் ஏதோ பிள்ளைகள் புத்தாண்டு கொண்டாட்டம் தானே! நண்பர்கலோடு சென்று வந்து விடுவார்கள் என்று நினைப்பவர்களும் உண்டு, இன்னும் சில பெற்றோர்கள்! பிள்ளைகளை கண்டு கொள்ளாமல், அவர்களும் தன் பங்கிற்கு கொண்டாட போய்விடுகின்றனர். இது தேவையா? தானும் கெட்டு பிள்ளைகளையும் கெடுக்கும் இந்த கேடுகெட்ட புத்தாண்டு கொண்டாட்டம். தேவையா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாம் இருபத்தி ஓராம் (THE TWENTY ONE OF CENTURY) நூற்றாண்டில் இருக்கிறோம். நமது சிந்தனைகளை சீரான வழியிலும், கல்வி மேம்பாட்டிலும், மனிதகுல சமுதாய ஒற்றுமையிலும், வறுமையை போக்க வழி தேடுவதிலும் நலமான வாழ்வு வாழ்வதிலும் நம் சமுதாயம் செலவிட்டால்! இன்னும் ஒரு இரட்டிப்பான இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்.

அப்துல் கலாம் சொன்னது போல் இளைஞர்கள் கனவு கண்டால் மட்டும் போதாது! இவர் காண சொன்ன கனவுகள் நிழலான வாழ்க்கை யாகிவிடும். சிந்திக்கும் ஆற்றல் உள்ளத்தில் ஒரு பிரளயத்தை ஏற்ப்படுத்தி நிஜவாழ்க்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அப்படி சிந்தித்தோமேயானால்! புத்தாண்டாவது, புண்ணாக்காவது என்று எண்ணி! வீணாகிக் கொண்டிருக்கும் மணித் துளிகளை, எண்ணினால்! அறிவுத் துளிகள் உயிர்த்துளி பெற்று விடும்.

அதே சமயம் இஸ்லாத்தில் இந்த மாதிரியான கேலிக் கூத்துக்களுக்கு இடமே இல்லை. மனித குலம் எவ்வளவு நலம் வாழ வேண்டுமோ, எவ்வளவு நன்மை பயக்கும் விதத்தில் பரிவு காட்ட வேண்டுமோ, அவ்வளவுக்கு இஸ்லாம் வழி வகை செய்து கொடுத்து இருக்கிறது. இதை மனிதன் சிந்திக்க தவறுகிறான்.

மேலும் இனிவரும் காலத்திலேயாவது மனித அறிவை சரியான முறையில் பயன் படுத்தி, இந்த முட்டாள் தானமான கொண்டாட்டத் தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, முழுமையான சிந்தனையோடு, இறைபக்தியை அதிகரிக்கச்செய்து அதன் பால்! நம் ஏகத்துவக் கொள்கைகளை இறைவன் நம்மை விட்டு விடாமல், நமக்கு நாமும் ஒரு கடிவாளத்தை போட்டு பாதுகாத்து புதிதாக நாம் நம் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் [ﷻ] கூறுகிறான்:

 قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏

“(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.”அல்குர்ஆன் 24 :30

அதே வசனத்தில் அல்லாஹ்[ﷻ] பெண்களுக்கும் எச்சரிக்கை விடுகிறான்!

 وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். 24:31

【مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ】

நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும்.

ஒவ்வொரு நாட்களிலும், பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், “மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே” என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

பிறமதச் சகோதரர்கள் இஸ்லாத்தைப் படித்து தெரிந்துக் கொள்வதை விட முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கைகளைப் பார்த்துத் தான் இஸ்லாத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அப்படியிருக்க நமது நடவடிக்கைகள் இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு முரணாக இருந்தால் உண்மையான இஸ்லாத்தை எவ்விதம் மற்றவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர வேண்டாமா?

புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல சாதனைகளையும் செய்து புததாண்டை அடையப்போகும் மகிழ்ச்சியில் தடபுடல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இனி நடைபெறும். புது வருடத்தை அடைந்ததற்காக பூரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணமாக பல கருத்துள்ள(¿) எஸ்எம்எஸ்கள் மெயில்கள் பரிமாறப்படும். தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாகவும் அன்பு வெளிப்படும்.

இந்த விழாக்கோலம் நம் சகோதரர்களையும் விட்டபாடில்லை. இஸ்லாமிய வருட பிறப்பானாலும், ஆங்கில வருட பிறப்பானாலும் அல்லது பிறந்த நாளானாலும் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிந்தித்து பார்த்தால் அதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

உலகத்தில் ஏதாவது சாதனை செய்தோ அல்லது கஷ்டப் பட்டு எதையாவது அடைந்தாலோ அதில் கொண்டாடுவதற்கு அர்த்தம் உள்ளது. முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய இரு பெருநாட்களும் இவ்விதத்திலேயே அமைந்துள்ளன. ஒரு மாதம் இறைவனுக்காக தன்னுடைய பசியையும் தாகத்தையும் இச்சைகளையும் துறந்து இறையச்சம் என்ற உன்னதத்தை அடைந்தோம் என்பதற்காகத்தான் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.

எல்லா தியாகங்களையும் செய்து தன்னுடைய வாழ்விலே மனித குலத்திற்கு முன்னுதாரணமாக உள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாகவும் நாமும் இறைவனுக்காக எவ்வித தியாகத்தையும் செய்யத்தயார் என வெளிகாட்டும் விதமாக இறைவன் சொன்ன வழியிலேயே அறுத்து பலியிட்டு ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி வந்தனர். இதைக் கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களுக்கும் என்ன சிறப்பு என்று நபிகள் நாயகம் அவர்கள் (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும், நோன்புப் பெருநாளுமாகும் என்று கூறினார்கள். அபூதாவூத்

புத்தாண்டை அடைவதற்கு நம்முடைய உயிரை நம்முடைய கையிலா பிடித்து வைத்திருந்தோம் கொண்டாடுவதற்கு? புத்தாண்டு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் வல்ல இறைவன் கொடுக்கும் வரம் அதை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அதை கொண்டாடுவதில் எவ்வித அர்த்தமுமில்லை.

ஒரு தினம் கொண்டாடப்படுவதற்கு அறிவுப்பூர்வமான காரணங்கள் ஏதும் அடிப்படையாக இருக்குமேயானால் அதில் மனித சமுதாயத்திற்கு பலன்கள் கிடைத்திட வாய்ப்புண்டு. வெறும் கூத்து கும்மாளம் போதை ஆட்டங்கள் போன்ற கேளிக்கைகளால் ஒருதினம் அனுஷ்டிக்கப்படுகிறதென்றால் அதனால் பெரும் பயன் எதுவும் உலகிற்கு கிடைத்து விடுவதில்லை. புதுவருடத்தை அடைந்து விட்டோம் என்பதாலும் அதில் வரக்கூடிய நாட்கள் சந்தோஷமாகவும் நல்லதாகவும் அமைய வேண்டும் என்பதாலும் அவ்வருடத்தின் முதல் தினத்தை கொண்டாடுவதாக மக்களில் சிலர் கூறுகின்றனர்.

நாட்களும் வருடங்களும் நல்லதாகவும் சந்தோஷமாகவும் அமைய வேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்கான அனுகுமுறை வீண் கேளிக்கை ஆட்டங்கள் என்பது நியாய உணர்வுள்ள யாராலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

(ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பது தனி விஷயம்.)

புத்தாண்டு கொண்டாட்டம் கிறித்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதை நாம் கொண்டாடக் கூடாது.

ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا

அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன் : 25:72)

3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود

ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத்

இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?

ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺭﺿﻮاﻥ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﺮﻓﻌﻪ اﻟﻠﻪ ﺑﻬﺎ ﺩﺭﺟﺎﺕ، ﻭﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺳﺨﻂ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﻬﻮﻱ ﺑﻬﺎ ﻓﻲ ﺟﻬﻨﻢ (صحيح البخاري)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(நூல்: ஸஹீஹ் புகாரி)

7319- صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ)). فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ: ((وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ)).

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமை நாள் வராது“ என்று கூறினார்கள். உடனே, “இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?“ என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?“ என்று (திருப்பிக்) கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி )

7320- صحيح البخاري عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ)). قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)).

“நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சாணுக்கு சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்” (அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).

மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

நமது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டது என்ற கவலைப்படும் தகவல் தான் அதனுள் அடங்கியுள்ளது.

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூடநம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும், மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. ஆண்களும், பெண்களும் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் நாசமாக்கப்படுகின்றன. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

【ஷரீஅத்தில் தனித்துவம்…】

ﻋﻦ ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟» ، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ». ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ 2881 من المشكاة : 3437 (قال الالباني هذا حديث ﺻﺤﻴﺢ)

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள்.

ஏனென்றால் அல்லாஹ்விற்கு மாறு செய்து எந்த நேர்ச்சையையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை அதே போல தனக்கு சொந்தமில்லாத பொருளில் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் கூடாது” என்றும் அறிவுறுத்தினார்கள். (நூல் : அபூதாவூத்)

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள். எனவே தான் வணக்க வழிபாடுகளிலும் “யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்” என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உறுதிபடக் கூறினார்கள்.

உம்: ஆஷூரா நோன்பு அதை இரண்டு நோன்பாக நோற்கச் சொன்னார்கள்.

【புத்தாண்டு கொண்டாட்டம் எனும் அனாச்சாரங்கள்…】

புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புறம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்கப்படுவது மறு புறம் இவைகளுக்காக சில இஸ்லாமிய பெயர் தாங்கிய நாடுகள் கூட பல கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பெருமிதம் கொள்கின்றன.

உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கி செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர், எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப் படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்.

மனித சமூகத்தை எப்படியாவது அல்லாஹ்வின் சிந்தனையிலிருந்து அப்புறப் படுத்திட வேண்டுமென்ற ஷைத்தானின் திட்டத்தை அவனுடைய பட்டாளங்களான யூத நஸாராக்கள் நடைமுறைப் படுத்திடும் நிகழ்வாகவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் அதில் நடக்கும் அனாச்சாரங்களும் வெளிப்படுத்துகிறது.

【புத்தாண்டு கொண்டாட்டம் கியாமத் நாள் நெருங்கியதை தெளிவுபடுத்துகிறது…】

இது கியாமத் நாள் நெருங்கியதை தெளிவுபடுத்துகிறது.

5437 – (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ) ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﺇﻥ ﻣﻦ ﺃﺷﺮاﻁ اﻟﺴﺎﻋﺔ ﺃﻥ ﻳﺮﻓﻊ اﻟﻌﻠﻢ ﻭﻳﻜﺜﺮ اﻟﺠﻬﻞ ﻭﻳﻜﺜﺮ اﻟﺰﻧﺎ ﻭﻳﻜﺜﺮ ﺷﺮﺏ اﻟﺨﻤﺮ ﻭﻳﻘﻞ اﻟﺮﺟﺎﻝ ﻭﺗﻜﺜﺮ اﻟﻨﺴﺎء ﺣﺘﻰ ﻳﻜﻮﻥ ﻟﺨﻤﺴﻴﻦ اﻣﺮﺃﺓ اﻟﻘﻴﻢ اﻟﻮاﺣﺪ» . ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ: «ﻳﻘﻞ اﻟﻌﻠﻢ ﻭﻳﻈﻬﺮ اﻟﺠﻬﻞ» . (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ)

கல்வி உயர்த்தப்படுவது. ( கல்விமான்கள் மரணிப்பது) அறியாமை அதிகமாவது.விபச்சாரம் அதிகரிப்பது மதுப்பிரியர்கள் அதிகமாவது. ஆண் இனம் குறைவது பெண் இனம் அதிகமாவது ஐம்பது பெண்களை ஒரு ஆண் நிர்வாகம் செய்யுமளவு அதிகமாகி விடுவது. இவைகள் அழிவு நாளின் அறிகுறிகளாகும்.

80- ِ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا))

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் “கியாமத்தின் அடையாளங்களிலிருந்து உள்ளதாகும் கல்வி உயர்த்தப் படுவதும், அறியாமை தரிபடுவதும், மதுபானம் அருந்தப் படுவதும், விபச்சாரம் பகிரங்கமாவதும்”

عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا اسْتَعْمَلَتْ أُمَّتِي خَمْسًا فَعَلَيْهِمُ الدَّمَارُ، إِذَا ظَهَرَ فِيهِمُ التَّلَاعُنُ، وَلُبْسُ الْحَرِيرِ، وَاتَّخَذُوا الْقَيْنَاتِ، وَشَرِبُوا الْخُمُورَ، وَاكْتَفَى الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ ” (رواه البيهقي في شعب الإيمان)

“என் சமூகம் ஐந்து விஷயங்களை செய்தால் அவர்களுக்கு அழிவு வந்து விடும் ஒருவருக்கொருவர் சாபமிடுவது. பட்டாடைகள் அணிவது. அவர்கள் பாடகிகளை ஏற்படுத்துவது. மதுபானங்களை அருந்துவது. ஆண்கள் ஆண்களோடும், பெண்கள் பெண்களோடும் சேர்ந்து இச்சையைத் தீர்த்துக் கொள்வது” என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல் : பைஹகீ ஷுஅபுல் ஈமான்)

【மதுவின் தீமைகள்….】

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை ரூ.164 கோடியை எட்டி உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட ரூ.22 கோடி அதிகமாகும்.

புத்தாண்டு தினத்தையொட்டி, டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில், ஆந்திராவில் ரூ. 150 கோடிக்கும், தெலங்கானாவில் ரூ.110 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது

நம் மாநிலங்களிலேயே இவ்வாறென்றால் மேலை நாடுகளில் சொல்லவா வேண்டும்.

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த தீரர் திப்பு சுல்தான் ரஹ் அவர்கள் மதுவை முற்றிலும் தடை செய்திருந்தார்.

இதன் தீங்கு குறித்து ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது.

“الخمر جماع الاثم” (رواه رزين)

“மது ஒட்டு மொத்த தீமைகளின் கூடாரமாகும்” ( நூல் : ரஜீன்)

ஆனால் மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்துவதால் பள்ளிப் பருவத்தில் உள்ள இளம் தலைமுறையினர் டாஸ்மாக் பார்களில் வலம் வரும் அவலங்களை காண நேரிடுகிறது.

எடுத்த எடுப்பிலேயே மதுவை யாரும் குடிக்க கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட காலகட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது.

ஆக மூன்று கட்டங்களாக அதனுடைய தீமைகளை நன்கு உணரச் செய்தே தடைசெய்தது.

1) முதல்கட்ட நடவடிக்கை

மது நல்ல பொருள் அல்ல அதன் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று உபதேசம் செய்தது.

மதுவைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப் பெறுவதற்கு முன்பு உமர் ( ரலி) அவர்கள். இறைவா! மதுவைப்பற்றி ஒரு தீர்க்கமான முடிவை எங்களுக்கு வழங்குவாயாக! என்று கூறி துஆ செய்தார்கள் அப்போது பின் வரும் வசனம் அருளப்பெற்றது.

يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விடப் பெரிது” (அல்குர்ஆன் : 2:219)

இரண்டாம் கட்ட நடவடிக்கை
இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப் பட்டுள்ளது. தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டுமென்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவேதான் நுட்பமான நுண்ணறிவு படைத்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ…

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; (அல்குர்ஆன் : 4:43)

இந்த வசனம் இறங்குவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.

3673- حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلاَمُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ دَعَاهُ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَسَقَاهُمَا قَبْلَ أَنْ تُحَرَّمَ الْخَمْرُ فَأَمَّهُمْ عَلِيٌّ فِي الْمَغْرِبِ فَقَرَأَ: {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} فَخَلَطَ فِيهَا فَنَزَلَتْ: {لاَ تَقْرَبُوا الصَّلاَةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ}

அலீ (ரலி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) ஆகிய இருவரையும் அன்சாரி குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவைக் குடிக்கக் கொடுத்தார்.(இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ(ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதி விட்டார். அப்போதுதான் (மேற்கூறப்பட்ட) அல்குர்ஆன் 4:43 வசனம் இறங்கியது அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: அபூதாவூத் (3186)

3) மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மதுவை முற்றிலும் தடை செய்தது.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் : 5:90)

اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏ 

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?(அல்குர்ஆன் : 5:91)

580 -[17] (ﺣﺴﻦ) ﻭﻋﻦ ﺃﺑﻲ اﻟﺪﺭﺩاء ﻗﺎﻝ: ﺃﻭﺻﺎﻧﻲ ﺧﻠﻴﻠﻲ ﻻ ﺗﺸﺮﺏ اﻟﺨﻤﺮ ﻓﺈﻧﻬﺎ ﻣﻔﺘﺎﺡ ﻛﻞ ﺷﺮ. ﺭﻭاﻩ اﺑﻦ ﻣﺎﺟﻪ

என்னுடைய உற்றநண்பர் முஹம்மத் ஸல் அவர்கள் எனக்கு உபதேசம் செய்தார்கள் நீங்கள் மது அருந்த வேண்டாம் அது தான் அனைத்து தீமைகளின் திறவு கோளாக இருக்கிறது என்று ( நூல்; இப்னு மாஜஹ் )

2777 -[19] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻟﻌﻦ اﻟﻠﻪ اﻟﺨﻤﺮ ﻭﺷﺎﺭﺑﻬﺎ ﻭﺳﺎﻗﻴﻬﺎ ﻭﺑﺎﺋﻌﻬﺎ ﻭﻣﺒﺘﺎﻋﻬﺎ ﻭﻋﺎﺻﺮﻫﺎ ﻭﻣﻌﺘﺼﺮﻫﺎ ﻭﺣﺎﻣﻠﻬﺎ ﻭاﻟﻤﺤﻤﻮﻟﺔ ﺇﻟﻴﻪ» . ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்தவருவாயை சாப்பிடுபவர்கள் மதுவோடு சம்மந்தப்பட்ட அனைவரையும் நபி صلى الله عليه وسلم அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத்,, இப்னுமாஜா

【ஆடல் பாடல் அரை நிர்வாணம்…】

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல் பாடல் அரை நிர்வாணம் போன்ற அட்டூழியங்கள் அழிவு நாளின் அறிகுறிகளே!

இவர்கள் குறித்து தான் பின்வரும் ஹதீஸில் வருகிறது.

5704- ِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا)).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,)மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்)

【புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசுகளின் வீண் விரயம்….】

407 – ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺑﺮﺯﺓ – ﺑﺮاء ﺛﻢ ﺯاﻱ – ﻧﻀﻠﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ اﻷﺳﻠﻤﻲ – ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ – ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ – ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺰﻭﻝ ﻗﺪﻣﺎ ﻋﺒﺪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺣﺘﻰ ﻳﺴﺄﻝ ﻋﻦ ﻋﻤﺮﻩ ﻓﻴﻢ ﺃﻓﻨﺎﻩ؟ ﻭﻋﻦ ﻋﻠﻤﻪ ﻓﻴﻢ ﻓﻌﻞ ﻓﻴﻪ؟ ﻭﻋﻦ ﻣﺎﻟﻪ ﻣﻦ ﺃﻳﻦ اﻛﺘﺴﺒﻪ؟ ﻭﻓﻴﻢ ﺃﻧﻔﻘﻪ؟ ﻭﻋﻦ ﺟﺴﻤﻪ ﻓﻴﻢ ﺃﺑﻼﻩ؟». ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ، (2417). 2340 ﻭﻗﺎﻝ: «ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ». )

சில காரியங்கள் பற்றி பதில் சொல்லாத வரை கியாமதில் மனித பாதங்கள் அசைய முடியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் அதில் தன் வாழ்நாளை எவ்வாறு கழித்தாய்? தான் கற்ற கல்வியை எப்படி செயல்படுத்தினாய்? பொருளை எவ்வழியில் சமபாதித்தாய்? எவ்வாறு செலவழித்தாய்? தன் உடலை (சக்தியை) எவ்வழியில் பயன்படுத்தினாய்.( நூல் : திர்மிதீ )

【இசைக் கருவிகளின் மயக்கம்….】

புத்தாண்டு இரவில் இசைகளை இசைத்துக் கொண்டும் கேட்டுக் கொ‌ண்டு‌ம் ஆடல் பாடல்கள் விடிய விடிய நடக்கிறது நம்மவர்களும் அதில் கலந்து கொள்ளும் அவலத்தை நாம் பார்க்கிறோம்.

இசைக் கருவிகளையும் பாட்டுகளையும் அல்லாஹ்வின் நினைவை மறக்கடிக்கும் மாபாதகக் குற்றங்கள் என்று திருமறை குர்ஆன் எச்சரிக்கிறது.

وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ⚪

(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு (அல்குர்ஆன் 31: 6)

قال حبر الأمة ابن عباس رضي الله عنهما: هو الغناء، وقال مجاهد رحمه الله: اللهو: الطبل (تفسير الطبري) وقال الحسن البصري رحمهالله: “نزلت هذه الآية في الغناء والمزامير” (تفسير ابن كثير).

இந்த ஆயத்திற்கு இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் பாட்டு இசைக் கருவிகளின் விஷயத்தில் இறங்கியது என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

وقال صلى الله عليه وسلم: «صوتان ملعونان، صوت مزمار عند نعمة، وصوت ويل عند مصيبة» (إسناده حسن، السلسلة الصحيحة 427)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் ” இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவை ‘மகிழ்ச்சியான நேரங்களில் இசைக்கப்படும் இசையின் ஓசை, இன்னும் துன்பத்தில் வெளிப்படும் (ஒப்பாரியின்) ஓசை”

இன்று இன்ப நேரங்களிலும் துன்ப நேரங்களிலும் இந்த சமுதாயம் கேடு கெட்ட இசைக் கருவிகளின் மயக்கத்தில் மூழ்கித் தவித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

【புத்தாண்டு காலண்டர்…】

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே புதிய காலண்டர் வாங்குவதும், விற்பதும் அன்பளிப்பாக கூட அச்சிட்டு கொடுப்பதும் முஸ்லிம்களிடையே கூட நடைபெறுகிறது. இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இஸ்லாமிய மாதங்களும் தொழுகை நேரங்களும் குறிப்பிடப்பட்ட காலண்டர்களை வாங்க வேண்டும். பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்களின் உருவப்படங்களை அச்சிட்டு விநியோகம் செய்யக்கூடாது.

முஸ்லிம் வியாபாரிகளில் சிலர் தங்களுடைய மாற்று மத நண்பர்களுக்கு அவர்களுடைய தெய்வங்களின் உருவப்படங்களை அச்சிட்டு காலண்டர் அன்பளிப்பாக வழங்குகின்றனர்.இது ஷிர்க்குக்கு துணை போகும் செயலாகும். அதற்கு பதிலாக இயற்கைக் காட்சிகளை அச்சிட்டு தருவது தவறில்லை. ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்.

ۘ وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَاب

ِ‏ இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2)

எனவே முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருந்து மாற்றார்களின் கலாச்சாரங்களை தவிர்த்து இறையச்சத்தோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக! ஆமீன்.

【எது உண்மையான புத்தாண்டு?】

ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தான் புத்தாண்டாக‌ இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.

உண்மையான, பல தியாகங்களும் நிறைந்த புத்தாண்டு என்று சொன்னால் அது இஸ்லாமிய முஹர்ரம் 1 – ஹிஜ்ரிப் புத்தாண்டு தான்

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு
தை 1 – தமிழ்ப் புத்தாண்டு
யுஹாதி – தெலுங்குப் புத்தாண்டு
முஹர்ரம் 1 – ஹிஜ்ரிப் புத்தாண்டு
மனித வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி ஆராய்ந்து பார்த்தால் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தன. பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படியெல்லாம் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டு பலமாதிரியாக மருவி நம்முன் வந்து நிற்கிறது என்பதை அறியலாம்.

கி.மு. 2000ம் ஆண்டில் மெசபடோமியாவினர் இளவேனிற் காலத்தை (மார்ச் 25) புத்தாண்டாகக் கொண்டாடினர். எகிப்தியர்கள் மற்றும் பாரசீகர்களும் அப்படியே கொண்டாடினர்.

கிரேக்கர்கள் குளிர்காலத்தில் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். ஆரம்ப ரோம காலண்டரிலும் மார்ச் ஒன்றாம் தேதி தான் புதுவருடம். அதில் பத்து மாதங்கள் தான் இருந்தன. மார்ச் தான் முதல் மாதம். செப்டம்பர் 7வதுமாதம், அக்டோபர் 8வது மாதம், நவம்பர் 9, டிசம்பர் 10 என்ற விதத்தில் தான் இருந்தது.

அதன் பிறகு கி.மு 700க்குப் பின் வந்த ரோம இரண்டாம் மன்னன் நுமா பொன்டிலியஸ் என்பவர் தான் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தார். இந்த காலண்டர் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

பிறகு கி.பி. 46ல் ஜூலியஸ் சீசர் தான் சூரியனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரை உருவாக்கினார். இவர் தான் ஜானஸ்(Janus) என்ற சூரியக்கடவுளின் பெயரால் ஜனவரியில் கொண்டாட்டத்தை உருவாக்கினார். இந்த ஜானஸ் என்ற கடவுளுக்கு இரண்டு முகங்கள் வைக்கப் பட்டன. ஒருமுகத்துக்கு பழைய வருடம் என்றும் மற்றொரு முகத்துக்கு புதிய வருடம் என்றும் பெயரிடப்பட்டிருந்தன. இப்படி புத்தாண்டை அவர்கள் ஒரு வணக்கம் போன்று கொண்டாடியிருந்ததை இவ்வரலாற்றுக் குறிப்பிலிருந்து நாம் அறிய முடிகிறது. ரோமானியர்கள் தங்கள் அலுவலகங்களில் ஜனவரி 1ஐ விருந்து கேளிக்கைகளுடன் கொண்டாடியுள்ளனர். பிறகு பழைய வழக்கம் என்ற பெயரில் மக்களைத் திருப்திப் படுத்த மார்ச் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.

அந்தக் காலகட்டத்தில் கிருஸ்தவ ஐரோப்பாவில் டிசம்பர் 25 இயேசு பிறந்தநாள், மார்ச் 1ம் தேதி annuciation day அதாவது ஜிப்ரயில் மர்யமிடம் உணர்த்திய நாள், மார்ச் 25ந்தேதி ஈஸ்டர் கொண்டாட்டம் என்ற ரீதியில் அவர்களின் வழிமுறை இருந்திருக்கிறது.

இப்படி மூடநம்பிக்கைகளாலும் இணைவைப்பு என்ற பாவத்தினாலும் அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நமக்குத் தேவையா? நாம் அதை கொண்டாட அனுமதி உள்ளதா? அதைக் கொண்டாடுவதன் மூலம் மார்க்கத்திற்கல்லவா நாம் மாறு செய்கிறோம்? ஒரு கொண்டாட்டத்தின் மூலம் எதுவாக இருக்கிறதென்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இஸ்லாம் கொண்டாடச் சொல்லும் தினங்களை எண்ணிப் பார்த்தாயா? அவைகளில் முழுமையான இறைஅழைப்பும் நினைவுகூறும் மகத்தான இரட்சகனுக்குச் செய்யப்படக்கூடிய தியாகப் படிப்பினைகளும் மறுமைக்கு வழிகாட்டலும் அல்லவா நிறைந்துள்ளது. அவற்றில் அல்லவா மனித சமுதாயத்துக்கு பலன் இருக்கிறது.

இன்றைய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மனிதர்களின் மூளைச்சலவையாய் இருக்கிறது. மனிதர்களுக்கு பயன்மிக்க வழிகாட்டலும் வளமான பின்னனியில்லாமலும் இருக்கிறது.

கண்ணியமிக்க அல்லாஹ் [ﷻ] கூறுகிறான்:

 وَمِنْ اٰيٰتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ‌ؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏

இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் – இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள். (அல்குர்ஆன்: 41:37)

【புத்தாண்டு கொண்டாடலாமா? கேள்வி – பதில்】

🔰கேள்வி : நாம் ஏன் புது வருடம் கொண்டாட கூடாது❓

💈பதில்

✅ நாம் முஸ்லீம்கள் மார்க்கம் சொல்லாத விஷயத்தை நாம் செய்யகூடாது❓

✅நம் நபிஸல் அவர்கள் புத்தாண்டு கொண்டாட வில்லை

✅அவர் வழி வாழ்ந்து வந்த சஹாபாக்களும் புத்தாண்டு கொண்டாடவில்லை

✅உங்கள் அப்பா காலத்தில்கூட யாரும் புத்தாண்டு கொண்டாடவில்லை.

✅புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பல ஹராமான காரியங்கள் தான் நடக்கிறது.

📓உண்ணுங்கள், பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்;

📓وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (7:31)

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...