ஸலாத்துன் நாரிய்யா ஓதலாமா?
இஸ்லாத்தின் பார்வையில் நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்.
♣ ஸலாத்துன் நாரிய்யா பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு
உண்மை முஃமின்களால், முத்தகீன்களால், இறைநேசச் செல்வர்களால் இறையருள் ஞானமேதைகளால் ஓதப்பட்டு வந்ததும் நமது சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களாலும் உலமாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ‘வஸீலாவின்’ பாற்பட்டதுமான ஸலாத்துன் நாரிய்யா குறித்து சமீபகாலமாக வஹ்ஹாபிகள் தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு அது கூடாது இது கூடாது என்று எடுத்ததுக்கெல்லாம் ‘ஷிர்க்- பித்அத்’ என்று சாயம் பூசும் பட்டியலில் ஸலாத்துன் நாரியாவையும் இணைத்து கூறி அறியாமையின் அல்லது அகம்பாவத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.
(4444) தடவை என்று பெரும் எண்ணிக்கையைச் சொன்னால் மக்கள் தானாக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்களை அழைப்பார்கள். அதற்கு பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நல்ல நோக்கம் எதுவும் இருக்க முடியாது என 4444 தடவை ஸலாத்துன் நாரிய்யா ஓதப்படுவதற்கான காரணத்தையும் ஆராய்ந்து கூறியுள்ளனர். இப்படிப்பட்ட இந்த வஹ்ஹாபிகளான புதுமைவாதிகளின் செயல்களும், விளக்கங்களும் முற்றிலும் ஈமானை அசுத்தப்படுத்தக் கூடிய அகம்பாவத்தின் வெளிப்பாடாகும்.
♣ ஸலாத்துன் நாரிய்யாவின் சிறப்புகள்
ஸலாத்துன்னாரிய்யா என்ற இந்த ஸலவாத் நம் முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நாட்டங்களை நிறைவேற்றும் "ஸலாதுன் நாரிய்யா" பற்றி குர்ஆன் விரிவுரையாளர்கள், இமாம்கள், முத்தகீன்கள், காமிலான ஷெய்குமார்கள், முஃமின்கள் வேறுபாடின்றி எகோபித்த கருத்து என்வென்றால் அண்ணல் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வாயினிக்க, நா மணக்க சொல்கின்ற ஸலவாத்துக்களில் முக்கியமான ஒன்று இந்த ஸலாதுன் நாரிய்யா என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
முஃமின்கள் ஒரு செயலை அது சிறப்பானது என்று கண்டால் அது இறைவனிடத்தும் சிறப்பானதே!” என்ற நபி மொழிக்கிணங்க,” ‘ஸலாத்துன் நாரிய்யா’ எனும் ஸலவாத்தை உலகம் முழுக்க ஈமானிய முஸ்லிம்கள் சிறப்பான செயலாகக் கண்டு ஓதுகின்றனர். அது இறைவனிடத்தும் சிறப்பானதாக அமையும் நற்பலன்களை ஈட்டித்தரும் என்பதே உண்மை விசுவாசிகள் நிலைப்பாடாகும்.
ஸலாத்துன் நாரிய்யா என்பது ஆரிபுபில்லாஹ் ஸெய்யது இப்றாஹீம் அத்தாஸீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் கோர்வை செய்யப்பட்டதாகும். (இவர்கள் ஸாதுலிய்யாத் தரீக்காவின் ஒரு முக்கியமான ஷெய்க் ஆவார்கள்) இந்த ஸலவாத், மொராக்கோ பகுதியில் “ஸலவாத்துத் தாஸீ” என்று பெயரும் சொல்லப்படுகிறது.
மொராக்கோ நாட்டினல் குழப்பங்கள்,சோதனைகள் ஏற்படுத்துகின்ற போது தூய ஆடை புனைந்து, நறுமணம் பூசி, மனத்தூய்மையோடு இந்த ஸலவாத்தை 4440 அல்லது 4444 தடவைகள் ஓதுவர். நெருப்பு, பஞ்சை எவ்வளவு வேகமாக கறித்து அழித்து விடுமோ அது போல் இந்த ஸலவாத்துடைய பயனால் சோதனைகள் அகலும், தேவைகள் நிறைவுபெறும். எனவேதான் ஸலாத்துன் நாரிய்யா 'நெருப்பு ஸலவாத்' எனப்பெயர் கூறி சொல்லப்பட்டது.
இமாம் செய்னுல் ஆப்தீன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்படி ஸலவாத்தை ஓதியதாக ஹஸீனத்துல் அஸ்ரார் என்ற நூலில் பதிவாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கஷ்டங்கள் நீங்க, தேவைகள் நிறைவேற இந்த ஸலவாத் பரீட்சித்துப் பார்த்து பலன் தருகின்ற ஒன்று என பல அறிஞர்களும் கருத்து வேறுபாடின்றி கூறுவதாக “ஸஆதத்துத் தாரைன்” என்ற நூல் அறிவிக்கிறது. கஸீனத்துல் அஸ்ரார் எனும் நூல், மெஞ்ஞானத் துறை துலக்கிய ஆத்மஞான வள்ளல்கள் இதனை “மிப்தாஹுல் கன்ஸுல் முஹீத்”சூழ்ந்திருக்கும் கஜானாவின் திறவுகோல் எனப் பெயர் சூட்டியுள்ளதாகக் கூறுகிறது.
இந்த ஸலவாத்தை ஒரு நாளைக்கு 41 தடவைகள் ஓதுவதை வழக்கமாக்கிக் கொண்டால் நினையாப் புறத்திலிருந்து ரிஸ்குகள் அவனைத் தேடிவரும் என அல்லாமா தூனூசி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், தொழுகைக்குப் பின்னர் 11 தடவைகள் இதனை வழக்கமாக ஓதி வருபவர் குறைவற்ற ரிஸ்கு கிடைக்கப் பெருவதோடு மேலான அந்தஸ்துகளையும் அடைவார். என மகான் தைனூரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள்,
திருமறை குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய அல்லாமா குர்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறிகின்றார்கள். “யாராவது இதனை தினமும் 41 அல்லது 100 முறை வழக்கமாக ஓதி வந்தால் அவரது துயரங்கள் அகலும். கஷ்டங்கள் இலேசாகும். அவர் அந்தஸ்து உயர்வடையும் ரிஸ்கு விசாலமாகும் மக்களிடம் இவரது கூற்று ஏற்றுக்கொள்ளப்படும். இவர் இறைவனிடம் இறைஞ்சும் துஆக்கள் வீணாகாது நிறைவேறும். இவை மன அடக்கத்தோடும், உண்மை விசுவாசத்தோடும் உளத்தூய்மையோடும் கேட்கும் போதுதான் என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.
♣ ஸலாத்துன் நாரிய்யாவின் பொருள் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரணானவையா? என்பது குறித்து இனி ஆராய்வோம்.
الصلاة النارية
اللَّهُمَّ صَلِّ صَلاَةً كَامِلَةً وَسَلِّمْ سَلاَماً تَامًّا
عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍالذي تَنْحَلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ وَتُقْضَى بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ وَيُسْتَسْقَى الْغَمَامُ بنور وَجْهِهِ الْكَرِيمِ وَعَلى آلِهِ وَصَحْبِهِ فِي كُلِّ لَمْحَةٍ وَنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُومٍ لَكَ
அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப்சின் பி அததி குல்லி மஃலூமின் லக்க
இறைவா! எங்கள் தலைவர் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது பூரணமான ஸலவாத்தையும், நிறைவான ஸலாமையும் சொல்வாயாக! அந்த அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் முடிச்சுகள் அவிழும், கஷ்டங்கள் அகலும், தேவைகள் நிறைவேறும், ஆசைகள் பெற்றுக் கொள்ளப்படும், நல்ல முடிவுகள் கிட்டும், சிறப்பான அண்ணார் திருமுகத்தின் பாக்கியத்தால் மேகங்கள் மழை பெய்விக்கும், அன்னார் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் வினாடிகள் தோறும் இறைவா! நீயே அறிந்திருப்பவற்றின் எண்ணிக்கைக்கு நிகராக (ஸலவாத்து, ஸலாம் சொல்வாயாக!)
என்பது இந்த ஸலவாத்தின் பொருள்! முடிச்சுகள் அவிழ, கஷ்டங்கள் அகல, தேவைகள் நிறைவேற, ஆசைகள் பூர்த்திபெற, நல்ல முடிவுகள் கிட்ட அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வஸீலாவாக அமைந்துள்ள ஒரு சிறந்த ஸலவாத்தாகும்.
♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களது பொருட்டால் முடிச்சுகள் அவிழும் என்று இந்த ஸலவாத்தில் கூறுகின்றோம். இப்படி கூறுவது சரிதானா?
عن أبي هريرة رضي الله عنه ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ ، فَارْقُدْ فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ ، انْحَلَّتْ عُقْدَةٌ ، فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ ، فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ ، فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ ، وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்'. என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி 1142, முஸ்லிம்)
♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களது பொருட்டால் சிரமங்கள் கஷ்டங்கள் நீங்கும்- அகலும் என்று இந்த ஸலவாத்தில் கூறுகின்றோம். இப்படி கூறுவது சரிதானா?
عَنْ أُمِّ جُنْدُبٍ , قَالَتْ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي وَهُوَ عَلَى دَابَّتِهِ ثُمَّ انْصَرَفَ وَتَبِعَتْهُ امْرَأَةٌ مِنْ خَثْعَمٍ مَعَهَا صَبِيٌّ لَهَا بِهِ بَلَاءٌ فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ , إِنَّ هَذَا ابْنِي وَبَقِيَّةُ أَهْلِي وَإِنَّ بِهِ بَلَاءً لَا يَتَكَلَّمُ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ائْتِينِي بِشَيْءٍ مِنْ مَاءٍ فَأُتِيَ بِمَاءٍ فَغَسَلَ يَدَيْهِ وَمَضْمَضَ فَاهُ ثُمَّ أَعْطَاهَا فَقَالَ اسْقِيهِ مِنْهُ وَصُبِّي عَلَيْهِ مِنْهُ وَاسْتَشْفِي اللَّهَ قَالَتْ : فَلَقِيتُ الْمَرْأَةَ مِنَ الْحَوْلِ فَسَأَلْتُهَا عَنِ الْغُلَامِ فَقَالَتْ : بَرَأَ وَعَقَلَ عَقْلًا لَيْسَ كَعُقُولِ النَّاسِ
நபிகள நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜம்ரத்துல் அகபாவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் நோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்றுடன் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். அவள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் ரஸூலே! இக்குழந்தைதான் எனது குடும்பத்தின் கடைசி குழந்தை. இது நோயால் பாதிக்கப்பட்டு பேசும் சக்தியை இழந்து விட்டுள்ளது என்று கூறவே, அது கேட்ட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வருமாறு சொல்ல, தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் தமது முபாரக்கான இரு கைகளையும் கழுவிய பின் வாயையும் அதனுள் கொப்பளித்து அத்தண்ணீரை அப்பெண்ணிடம் கொடுத்து, அதனை அக்குழந்தைக்கு பருக தந்து பின்னர் அக்குழந்தையின் மீது ஊற்று. அல்லாஹ்வைக் கொண்டு சுகம் பெறும் என்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்கள், அறிவிப்பவர் உம்மு ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு (நூல்: இப்னு மாஜா, பாகம் 4 பக்கம் 130, ஹதீஸ் எண் 3523)
♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களது பொருட்டால் தேவைகள் நிறைவேறும் என்று இந்த ஸலவாத்தில் கூறுகின்றோம். இப்படி கூறுவது சரிதானா?
أنَّ رجلًا ضريرًا أتى النبيَّ صَلَّى اللَّهُ عليْهِ وعلى آلهِ وسلَّمَ فقال : يا نبيَّ اللهِ ادعُ اللهَ أنْ يعافيَني . فقال : إنْ شئْتَ أخرْتُ ذلك فهوَ أفضلُ لآخرتِكَ ، وإنْ شئْتَ دعوْتُ لكَ قال : لا بلْ ادعُ اللهَ لي . فأمرَهُ أنْ يتوضأَ وأنْ يصليَ ركعتينِ وأنْ يدعوَ بهذا الدعاءِ : اللَّهمَّ إنِّي أسألُكَ وأتوجَّهُ إليكَ بنبيِّكَ محمدٍ صَلَّى اللَّهُ عليْهِ وعلى آلهِ وسلَّمَ نبيِّ الرحمةِ ، يا محمدُ إنِّي أتوجَّهُ بكَ إلى ربِّي في حاجَتي هذه فتَقضى , وتُشفعُني فيه وتشفعُهُ فيَّ . قال : فكان يقولُ هذا مرارًا , ثم قال بعدُ – أحسبُ أنَّ فيها : أنْ تُشفعَني فيه – قال : ففعلَ الرجلُ فبرأَ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கண்பார்வையிழந்த ஸஹாபி ஒருவருக்கு பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். (அதனை ஓதிய அவர் பார்வை பெற்று நலமடைந்தார். தேவைகள் ஏற்படும் போதெல்லாம் ஸஹாபாக்கள் இந்த துஆவை ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்) இச்சிறப்பு மிக்க துஆ இதோ!
யா அல்லாஹ்! உன்னிடம் கேட்கிறேன். ரஹ்மத்துடைய நபியாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொருட்டைக் கொண்டு உன்பால் முகம் நோக்குகின்றேன். யா ரசூலல்லாஹ்! உங்கள் பொருட்டைக் கொண்டு நாயன்பால் எனது இத்தேவைக்காக முகம் நோக்குகின்றேன். என் தேவை நிறைவேறுவதற்காக நாயனே! எனது விடயத்தில் அன்னாரின் ஷபாஅத்தை ஏற்றுக்கொள்வாயாக. (நூல்கள்: திர்மிதி 2 -197, இப்னுமாஜா 1 - 441, நஸாயி 658, 659, முஸ்தத்றக் 1 - 519, இப்னுஹுசைமா2 - 226)
♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களது பொருட்டால் ஆசைகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று இந்த ஸலவாத்தில் கூறுகின்றோம். இப்படி கூறுவது சரிதானா?
عَنْ أبي هُرَيْرَةَ قالَ: قُلْتُ: يَا رسولَ اللَّهِ! إنِّي أسْمعُ مِنْكَ حَدِيثا كَثِيرا أنُسَاهُ، قالَ: ( ابْسُطْ رِدَاءَكَ) فَبَسَطْتُهُ، قالَ: فَغَرَفَ بِيَدَيْهِ ثُمَّ قالَ: ( ضمَّهُ) ، فَضَممْتُهُ فَمَا نَسِيتُ شَيْئا بَعْدَهُ.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு “உம்முடைய மேலங்கியை விரியும்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து) விட்டுப் பின்னர், “அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!“ என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை“ என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (நூல் புகாரி 119)
அந்த அடிப்படையில் தனக்கு ஞாபக மறதி நீங்க வேண்டும் என்ற ஆசையை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வெளிப்படுத்திய பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மூலம் அந்த ஆசை நிறைவேற்றப்பட்டது என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்க முடிகின்றது.
♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களது பொருட்டால் நல்ல முடிவுகளை பெற்றுக் கொள்ளப்படும் என்று இந்த ஸலவாத்தில் கூறுகின்றோம். இப்படி கூறுவது சரிதானா?
وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا
இன்னும், நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டு உம்மிடம் வந்து, பின்னர் அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்புக்கோரி, அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை ஏற்பவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 04:64)
♣ நபிகள் நாயகம் ﷺ அவர்களது சங்கைமிக்க சிறப்பான அண்ணார் திருமுகத்தின் பாக்கியத்தால் பொருட்டால் மழை தேடப்படும் என்று இந்த ஸலவாத்தில் கூறுகின்றோம். இப்படி கூறுவது சரிதானா?
عَنْ أَنَس رضي الله عنه أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا. قَالَ فَيُسْقَوْنَ.
(மதீனாவில்) மழைப் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக இருந்தார்கள். அதாவது இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆகியிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும். (நூல்: புகாரி 1 - 137, மிஷ்காத் – 132)
மேலே கூறப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில்தான் ஸலாத்துன் நாரிய்யாவின் வார்த்தைகள் அமைந்துள்ளன.. எனவே ஸலவாதுக்களில் ஒன்றான "ஸலாதுன் நாரிய்யா" ஒரு இஸ்திகாதா, வஸீலா என்ற அடிப்படையில் அதாவது ஸலவாத் பொருட்டினால் இறைவனிடம் உதவி தேடி ஓதலாம் என்பது தெளிவாகின்றது.
ஆகவே இந்த ஸலவாத்தை ஓதுவதின் பரக்கத்தினால் நாயகத்தின் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணுகின்ற பாக்கியத்தினைப் பெறவும். “சுந்தரத் திருநபியின் சந்திர திருவதனத்தை கனவில் பார்க்கின்ற பேற்றினைப் பெற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகுத் தோற்றத்தினை நேரில் பார்க்கும் பாக்கியத்தினைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக. ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...