Monday, 12 June 2017

தராவீஹ் 17 ம் நாள்

தராவீஹ் 17 ம் நாள்



இன்று ரமலான் 17 ம் நாள்.கண்ணியம் நிறைந்த பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்.இஸ்லாமிய வரலாற்றின் முதல் வெற்றிப் போரான பத்ரு நிகழ்ந்த நாள்.
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கு மிடையில் நடை பெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும்,
புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில்,
சத்தியத்திற்காகப் போராடியவர்கள் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியவர்களைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தார்கள்.
பத்ர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு,
ரமலான் மாதம், பதினேழாம் நாள் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவே மதிக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அசத்திய அணியை ஈமானியப் போராளிகள் மிகக் குறைந்த ஆயுத பலத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்றவர்களாக எதிர் கொண்டனர்.
போர்க்காரணம்
ﺳﻤﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻘﺎﻓﻠﺔ ﻗﺮﻳﺶ ﻗﺪ ﺃﻗﺒﻠﺖ ﻣﻦ ﺍﻟﺸﺎﻡ ﺇﻟﻰ ﻣﻜﺔ ، ﻭﻗﺪ ﻛﺎﻥ ﻳﻘﻮﺩﻫﺎ ﺃﺑﺎ ﺳﻔﻴﺎﻥ ﺑﻦ ﺣﺮﺏ ﻣﻊ ﺭﺟﺎﻝ ﻻ ﻳﺰﻳﺪﻭﻥ ﻋﻦ ﺍﻷﺭﺑﻌﻴﻦ . ﻭﻗﺪ ﺃﺭﺍﺩ ﺍﻟﺮﺳﻮﻝ ﻋﻠﻴﻪ ﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﺍﻟﻬﺠﻮﻡ ﻋﻠﻰ ﺍﻟﻘﺎﻓﻠﺔ ﻭﺍﻻﺳﺘﻴﻼﺀ ﻋﻠﻴﻬﺎ ﺭﺩﺍ ﻟﻤﺎ ﻓﻌﻠﻪ ﺍﻟﻤﺸﺮﻛﻮﻥ ﻋﻨﺪﻣﺎ ﻫﺎﺟﺮ ﺍﻟﻤﺴﻠﻤﻮﻥ ﺇﻟﻰ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ، ﻭﻗﺎﻝ ﻷﺻﺤﺎﺑﻪ : " ﻫﺬﻩ ﻋﻴﺮ ﻗﺮﻳﺶ ﻓﻴﻬﺎ ﺃﻣﻮﺍﻟﻬﻢ ﻓﺎﺧﺮﺟﻮﺍ ﺇﻟﻴﻬﺎ " .
ﻛﺎﻥ ﺫﻟﻚ ﻓﻲ ﺍﻟﺜﺎﻟﺚ ﻣﻦ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ ﻓﻲ ﺍﻟﺴﻨﺔ ﺍﻟﺜﺎﻧﻴﺔ ﻟﻠﻬﺠﺮﺓ ، ﻭﻗﺪ ﺑﻠﻎ ﻋﺪﺩ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺛﻼﺛﻤﺎﺋﺔ ﻭﺛﻼﺛﺔ ﻋﺸﺮ ﺭﺟﻼ ، ﻭﻣﻌﻬﻢ ﻓﺮﺳﺎﻥ ﻭﺳﺒﻌﻮﻥ ﺑﻌﻴﺮﺍ . ﻭﺗﺮﻙ ﺍﻟﺮﺳﻮﻝ ﻋﻠﻴﻪ ﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺃﻡ ﻣﻜﺘﻮﻡ ﻭﺍﻟﻴﺎ ﻋﻠﻰ ﺍﻟﻤﺪﻳﻨﺔ . ﻟﻤﺎ ﻋﻠﻢ ﺃﺑﻮ ﺳﻔﻴﺎﻥ ﺑﺄﻣﺮ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺃﺻﺤﺎﺑﻪ ﺃﺭﺳﻞ ﺿﻤﻀﻢ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺍﻟﻐﻔﺎﺭﻱ ﺇﻟﻰ ﺃﻫﻞ ﻣﻜﺔ ﻳﻄﻠﺐ ﻧﺠﺪﺗﻬﻢ . ﻭﻟﻢ ﻭﺻﻞ ﺿﻤﻀﻢ ﺇﻟﻰ ﺃﻫﻞ ﻗﺮﻳﺶ ﺻﺮﺥ ﻓﻴﻬﻢ ﻗﺎﺋﻼ : " ﻳﺎ ﻣﻌﺸﺮ ﻗﺮﻳﺶ ، ﺃﻣﻮﺍﻟﻜﻢ ﻣﻊ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ ﻋﺮﺽ ﻟﻬﺎ ﻣﺤﻤﺪﺍ ﻭﺃﺻﺤﺎﺑﻪ ﻻ ﺃﺭﻯ ﺃﻥ ﺗﺪﺭﻛﻮﻫﺎ " . ﻓﺜﺎﺭ ﺍﻟﻤﺸﺮﻛﻮﻥ ﺛﻮﺭﺓ ﻋﻨﻴﻔﺔ ، ﻭﺗﺠﻬﺰﻭﺍ ﺑﺘﺴﻌﻤﺎﺋﺔ ﻭﺧﻤﺴﻴﻦ ﺭﺟﻼ ﻣﻌﻬﻢ ﻣﺎﺋﺔ ﻓﺮﺱ ، ﻭﺳﺒﻌﻤﺎﺋﺔ ﺑﻌﻴﺮ .
ﺟﺎﺀﺕ ﺍﻷﺧﺒﺎﺭ ﺇﻟﻰ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻥ ﻗﺎﻓﻠﺔ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ ﻗﺪ ﻏﻴﺮﺕ ﺍﺗﺠﺎﻩ ﻃﺮﻳﻘﻬﺎ ، ﻭﺃﻧﻪ ﺳﻴﺼﻠﻬﺎ ﻏﺪﺍ ﺃﻭ ﺑﻌﺪ ﻏﺪ . ﻓﺄﺭﺳﻞ ﺃﺑﻮ ﺳﻔﻴﺎﻥ ﻷﻫﻞ ﻣﻜﺔ ﺑﺄﻥ ﺍﻟﻠﻪ ﻗﺪ ﻧﺠﻰ ﻗﺎﻓﻠﺘﻪ ، ﻭﺃﻧﻪ ﻻ ﺣﺎﺟﺔ ﻟﻠﻤﺴﺎﻋﺪﺓ . ﻭﻟﻜﻦ ﺃﺑﺎ ﺟﻬﻞ ﺛﺎﺭ ﺑﻐﻀﺐ ﻭﻗﺎﻝ : " ﻭﺍﻟﻠﻪ ﻻ ﻧﺮﺟﻊ ﺣﺘﻰ ﻧﺮﺩ ﺑﺪﺭﺍ "
ﺟﻤﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﺻﺤﺎﺑﻪ ﻭﻗﺎﻝ ﻟﻬﻢ : ﺇﻥ ﺍﻟﻠﻪ ﺃﻧﺰﻝ ﺍﻵﻳﺔ ﺍﻟﻜﺮﻳﻤﺔ ﺍﻟﺘﺎﻟﻴﺔ : )) ﻭ ﺇﺫ ﻳﻌﺪﻛﻢ ﺍﻟﻠﻪ ﺇﺣﺪﻯ ﺍﻟﻄﺎﺋﻔﺘﻴﻦ ﺃﻧﻬﻤﺎ ﻟﻜﻢ ﻭ ﺗﻮﺩﻭﻥ ﺃﻥّ ﻏﻴﺮ ﺫﺍﺕ ﺍﻟﺸﻮﻛﺔ ﺗﻜﻮﻥ ﻟﻜﻢ ﻭ ﻳﺮﻳﺪ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﻳﺤﻖ ﺍﻟﺤﻖ ﺑﻜﻠﻤﺎﺗﻪ ﻭ ﻳﻘﻄﻊ ﺩﺍﺑﺮ ﺍﻟﻜﺎﻓﺮﻳﻦ ))
குறைஷித் தலைவர்களில் ஒருவரான அபூசுப்யான் மக்காவாசிகளான முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்று பெரும் பொருட்களோடு மக்கா திரும்பிக் கொண்டிருந்தார்.ஹிஜ்ரத்தின் போது ஸஹாபாக்களிடம் மக்கா வாசிகள் நடந்து கொண்டதற்கு பழிவாங்கும் முகமாக அபூசுப்யானின் அந்த வியாபார கூட்டத்தை முற்றுகையிட பெருமானார் ஸல் அவர்கள் விரும்பினார்கள். தங்களை நபியவர்களும் அவர்களின் தோழர்களும் முற்றுகையிட வருகிறார்கள் என்பதையறிந்த அபூசுப்யான் மக்காவிற்கு தூதனுப்பி பாதுகாப்பு கேட்டிருந்தார். அதற்கிடையில் அவர்கள் மக்காவிற்கு மதீனாவின் வழியாக செல்லும் வழமையான வழியை விட்டு வழியை மாற்றி செங்கடல் வழியாக சென்று மக்காவை சென்றடைந்தனர்.
வர்த்தகக் குழுவிற்கு பாதுகாப்பு தேவை என்ற செய்தி குறைஷி காபிர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைய ஆயிரம் பேர் கொண்ட படையை திரட்டி வர்த்தக பாதுகாப்புக் குழு என்ற பெயரில் புறப்பட்டார்கள். எவ்வித இடையூறுமின்றி வழியை மாற்றி மக்கா சென்றடைந்த அபூசுப்யான்
‘மக்காவிற்கு திரும்பி விடுங்கள்’
என்று செய்தியனுப்பினார். அபூஜஹல் அதை நிராகரித்து பத்ரில் படையை இறக்கினான்.
மக்காக் காபிர்கள் போருக்குத் தயாராகி மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது.
குறைஷிகள் படை திரட்டி வருகிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் பெருமானார் அவர்களும் தற்பாதுகாப்புக்காக 313 ஸஹாபாக்களைக் கொண்டு படை ஏற்படுத்தி புறப்பட்டார்கள்.
வியாபாரக் கூட்டத்தை பிடிப்பதற்காக சென்ற சமயம் யதார்த்தமாக அது போராக மாறியது.
எனினும், சிலர் போர் புரிவதை விரும்பவில்லை. இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் படியும் அதில் காபிர்களை வேரறுப்பதையே அல்லாஹ் விரும்பினான் என்பதையும் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
ﻛَﻤَﺎ ﺃَﺧْﺮَﺟَﻚَ ﺭَﺑُّﻚَ ﻣِﻦْ ﺑَﻴْﺘِﻚَ ﺑِﺎﻟْﺤَﻖِّ ﻭَﺇِﻥَّ ﻓَﺮِﻳﻘًﺎ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻟَﻜَﺎﺭِﻫُﻮﻥَ
உமதிரட்சகன் உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது. நிச்சியமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் {பத்ர்} யுத்தத்தின் போது உம்முடன் வருவதை) வெறுக்கக் கூடியவர்களாக இருந்தனர். {8 ; 5}
நபி ஸல் அவர்கள் தனது தோழர்களின் மனநிலையை அறிவதற்காக முயற்சித்தார்கள். யாரிடம் கேட்டால் போர் புரியச் சொல்வார்களோ அவர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். உமர் ரலி அபூபக்கர் ரலி போன்ற குறைஷிகள் போராடத்தான் வேண்டுமென்றனர். ஆனாலும், நபியவர்கள் மதீனத்து அன்ஸாரிகளின் மனநிலை எவ்வாறுள்ளது என்பதை அறியவே விரும்பினார்கள்.
" ﺃﺷﻴﺮﻭﺍ ﻋﻠﻲ ﺃﻳﻬﺎ ﺍﻟﻨﺎﺱ ‏( ﻳﺮﻳﺪ ﺍﻷﻧﺼﺎﺭ ‏) . " ﻓﻘﺎﻡ ﺳﻌﺪ ﺑﻦ ﻣﻌﺎﺫ ﻭﻗﺎﻝ :
" ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ، ﺁﻣﻨﺎ ﺑﻚ ﻭﺻﺪﻗﻨﺎﻙ ﻭﺃﻋﻄﻴﻨﺎﻙ ﻋﻬﻮﺩﻧﺎ ﻓﺎﻣﺾ ﻟﻤﺎ ﺃﻣﺮﻙ ﺍﻟﻠﻪ ، ﻓﻮﺍﻟﺬﻱ ﺑﻌﺜﻚ ﺑﺎﻟﺤﻖ ﻟﻮ ﺍﺳﺘﻌﺮﺿﺖ ﺑﻨﺎ ﻫﺬﺍ ﺍﻟﺒﺤﺮ ﻓﺨﻀﺘﻪ ﻟﺨﻀﻨﺎﻩ ﻣﻌﻚ ﻣﺎ ﺗﺨﻠﻒ ﻣﻨﺎ ﺭﺟﻞ ﻭﺍﺣﺪ " ﻓﻘﺎﻝ ﺍﻟﺮﺳﻮﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : " ﺃﺑﺸﺮﻭﺍ ، ﻭﺍﻟﻠﻪ ﻟﻜﺄﻧﻲ ﺃﻧﻈﺮ ﺇﻟﻰ ﻣﺼﺎﺭﻉ ﺍﻟﻘﻮﻡ " .
இதனை உணர்ந்து கொண்ட ஸஅத் இப்னு உபாதா (ர) அவர்கள் எழுந்து,
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள், எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன்.நிச்சயமாக நாங்கள் உங்களை ஈமான் கொண்டிருக்கிறோம்.உங்களை உண்மைப்படுத்தி யிருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம். உங்களுக்கு அல்லாஹ் ஏவியதை நீங்கள் செயல்படுத்துங்கள். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! கடலில் மூழ்க நீங்கள் கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று வீர முழக்கமிட்டார்கள். (முஸ்லிம்)
ﻓﻘﺎﻡ ﺍﻟﻤﻘﺪﺍﺩ ﺑﻦ ﺍﻷﺳﻮﺩ ﻭﻗﺎﻝ : " ﺍﻣﺾ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻟﻤﺎ ﺃﻣﺮﻙ ﺭﺑﻚ ، ﻓﻮﺍﻟﻠﻪ ﻻ ﻧﻘﻮﻝ ﻟﻚ ﻛﻤﺎ ﻗﺎﻟﺖ ﺑﻨﻮ ﺇﺳﺮﺍﺋﻴﻞ ﻟﻤﻮﺳﻰ : )) ﻗﺎﻟﻮﺍ ﻳﺎ ﻣﻮﺳﻰ ﺇﻧﺎ ﻟﻦ ﻧﺪﺧﻠﻬﺎ ﺃﺑﺪﺍً ﻣﺎ ﺩﺍﻣﻮﺍ ﻟﻴﻬﺎ ﻓﺎﺫﻫﺐ ﺃﻧﺖ ﻭ ﺭﺑﻚ ﻓﻘﺎﺗﻼ ﺇﻧﺎ ﻫﺎﻫﻨﺎ ﻗﺎﻋﺪﻭﻥ ))
ﻭﻟﻜﻦ ﻧﻘﻮﻝ ﻟﻚ : ﺍﺫﻫﺐ ﺃﻧﺖ ﻭﺭﺑﻚ ﻓﻘﺎﺗﻼ ﺇﻧﺎ ﻣﻌﻜﻤﺎ ﻣﻘﺎﺗﻠﻮﻥ . ﻓﺄﺑﺸﺮ ﺍﻟﺮﺳﻮﻝ ﻋﻠﻴﻪ ﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﺧﻴﺮﺍ :
அதேபோல் மிக்தாத் ரலி அவர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! நீரும் உமது இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று மூஸாவின் சமூக் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம்.மாறாக நீங்களும் உங்கள் இறைவனும் செல்லுங்கள். உங்கள் வலது புறமும், இடது புறமும், முன்னாலும்,
பின்னாலும் நின்று நாங்கள் போர் புரிவோம் என்று கூறியபோது,
நபியவர்களின் முகம் பிரகாசமடைந்தது. (புகாரி)
அதன் பிறகு போருக்கு தயாராகி சென்றார்கள். முஸ்லிம்களின் படைப்பிரிவில் 3 குதிரைகளும், 9 உருக்குச் சட்டைகளும், 8 வாளாயுதங்களும், 70 ஒட்டகங்களும் இருந்தன.
எதிரிகள் படையில் 100 குதிரைகளும், 700 ஒட்டகங்களும் ஏராளமான யுத்த தளவாடங்களும் இருந்தன.
இப்போரில் அல்லாஹ் வெற்றியை முஸ்லிம்களுக்கு கொடுத்தான். முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள். அவர்களின் திருநாமங்கள்:
1. முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்கதிர் ரலியல்லாஹு அன்ஹு
2. ரபீஃஉ இப்னு முஅல்லா ரலியல்லாஹு அன்ஹு
3. ஸஃது இப்னு கய்சமா ரலியல்லாஹு அன்ஹு
4. யஜீது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
5. உபைதா இப்னு ஹாரிது ரலியல்லாஹு அன்ஹு
6. ஆகில் இப்னு புகைரு ரலியல்லாஹு அன்ஹு
7. உமைர் இப்னு ஹுமாம் ரலியல்லாஹு அன்ஹு
8. முஅவ்விது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
9. திஷ்ஷிமாலைன் இப்னு அம்து அம்ரு ரலியல்லாஹு அன்ஹு
10. மிஹ்ஜா இப்னு சாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு
11. உமைர் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு
12. ஹாரிஸா இப்னு சுராக்கா ரலியல்லாஹு அன்ஹு
13. சஃப்வான் இப்னு வஹப் ரலியல்லாஹு அன்ஹு
14. அவ்ஃப் இப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு.
பத்ரு தரும் படிப்பினைகள்
1, அன்றைய பத்ரு களத்தில் ஸஹாபாக்கள் உள்ளத்தில் சத்தியம் அசத்தியம் என்ற உணர்வு தான் இருந்தது.சொந்த பந்தங்களை அவர்கள் நினைத்துப் பார்க்க வில்லை.
ﺻﺪﻕ ﺍﻟﺼﺤﺎﺑﺔ ﻓﻲ ﻣﻮﺍﻻﺗﻬﻢ ﻟﻠﻤﺆﻣﻨﻴﻦ، ﻭﻣﻌﺎﺩﺍﺗﻬﻢ ﻟﻠﻜﺎﻓﺮﻳﻦ، ﻭﻗﺪ ﻇﻬﺮ ﺫﻟﻚ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ، ﻋﻨﺪﻣﺎ ﻗﺘﻞ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﺧﺎﻟﻪ ﺍﻟﻌﺎﺹ ﺑﻦ ﻫﺸﺎﻡ ﺑﻦ ﺍﻟﻤﻐﻴﺮﺓ، ﻭﻟﻢ ﻳﻠﺘﻔﺖ ﺇﻟﻰ ﻗﺮﺍﺑﺘﻪ ﻣﻨﻪ، ﻭﻫَﻢّ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺑﻘﺘﻞ ﺍﺑﻨﻪ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ، ﻭﻗﺘﻞ ﺣﻤﺰﺓ ﻭﻋﻠﻲ ﻭﻋﺒﻴﺪﺓ ﺑﻦ ﺍﻟﺤﺎﺭﺙ ﺃﺑﻨﺎﺀ ﻋﻤﻬﻢ ﻋﺘﺒﺔ ﻭﺷﻴﺒﺔ ﻭﺍﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﻋﺘﺒﺔ، ﻭﺫﻟﻚ ﻓﻲ ﺍﻟﻤﺒﺎﺭﺯﺓ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ ﻻ ﺗَﺠِﺪُ ﻗَﻮْﻣﺎً ﻳُﺆْﻣِﻨُﻮﻥَ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻵﺧِﺮِ ﻳُﻮَﺍﺩُّﻭﻥَ ﻣَﻦْ ﺣَﺎﺩَّ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻧُﻮﺍ ﺁﺑَﺎﺀَﻫُﻢْ ﺃَﻭْ ﺃَﺑْﻨَﺎﺀَﻫُﻢْ ﺃَﻭْ ﺇِﺧْﻮَﺍﻧَﻬُﻢْ ﺃَﻭْ ﻋَﺸِﻴﺮَﺗَﻬُﻢْ ﺃُﻭْﻟَﺌِﻚَ ﻛَﺘَﺐَ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻬِﻢْ ﺍﻹِﻳﻤَﺎﻥَ ﻭَﺃَﻳَّﺪَﻫُﻢْ ﺑِﺮُﻭﺡٍ ﻣِﻨْﻪُ ﻭَﻳُﺪْﺧِﻠُﻬُﻢْ ﺟَﻨَّﺎﺕٍ ﺗَﺠْﺮِﻱ ﻣِﻦْ ﺗَﺤْﺘِﻬَﺎ ﺍﻷَﻧْﻬَﺎﺭُ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻢْ ﻭَﺭَﺿُﻮﺍ ﻋَﻨْﻪُ ﺃُﻭْﻟَﺌِﻚَ ﺣِﺰْﺏُ ﺍﻟﻠّـﻪِ ﺃَﻻ ﺇِﻥَّ ﺣِﺰْﺏَ ﺍﻟﻠَّﻪِ ﻫُﻢْ ﺍﻟْﻤُﻔْﻠِﺤُﻮﻥَ ﴾ ‏[ ﺍﻟﻤﺠﺎﺩﻟﺔ : 22 ].
உமர் ரலி அவர்கள் தன் மாமா ஆஸ் பின் ஹிஷாமைக் கொன்றார்கள்.அபூபக்கர் ரலி அவர்கள் தன் மகன் அப்துர்ரஹ்மானை கொலை செய்ய நினைத்தார்கள்.ஹம்ஸா,அலி, உபைதா ரலி ஆகியோர் தங்கள் சிறிய தந்தை மகன்களான உத்பா,ஷைபா, வலீது பின் உத்பாவை கொன்றார்கள்.
ﺃﻥ ﺍﻟﺪﻋﺎﺀ ﻣﻦ ﺃﻋﻈﻢ ﺃﺳﺒﺎﺏ ﺍﻟﻨﺼﺮ ﻋﻠﻰ ﺍﻷﻋﺪﺍﺀ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ ﺇِﺫْ ﺗَﺴْﺘَﻐِﻴﺜُﻮﻥَ ﺭَﺑَّﻜُﻢْ ﻓَﺎﺳْﺘَﺠَﺎﺏَ ﻟَﻜُﻢْ ﺃَﻧِّﻲ ﻣُﻤِﺪُّﻛُﻢْ ﺑِﺄَﻟْﻒٍ ﻣِﻦْ ﺍﻟْﻤَﻼﺋِﻜَﺔِ ﻣُﺮْﺩِﻓِﻴﻦَ ﴾ ‏[ ﺍﻷﻧﻔﺎﻝ : 9 ].
ﻭﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻳﺪﻋﻮ ﺭﺑﻪ ﻭﻳﺴﺘﻐﻴﺚ ﺑﻪ ﻛﻠﻤﺎ ﻧﺰﻝ ﺑﻪ ﻛﺮﺏ ﺃﻭ ﺷﺪﺓ، ﻛﻤﺎ ﺣﺪﺙ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ .
2, எதிரிகளோடு போராடும் போராட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைப்பதற்கு மாபெரும் உதவியாக இருந்தது பெருமானாரின் துஆ.
ﺭﻭﻯ ﻣﺴﻠﻢ ﻓﻲ ﺻﺤﻴﺤﻪ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﻗﺎﻝ : ﻟﻤﺎ ﻛﺎﻥ ﻳﻮﻡ ﺑﺪﺭ ﻧﻈﺮ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺇﻟﻰ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ، ﻭﻫﻢ ﺃﻟﻒ، ﻭﺃﺻﺤﺎﺑﻪ ﺛﻼﺛﻤﺎﺋﺔ ﻭﺗﺴﻌﺔ ﻋﺸﺮ ﺭﺟﻼً، ﻓﺎﺳﺘﻘﺒﻞ ﻧﺒﻲ ﺍﻟﻠﻪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺍﻟﻘﺒﻠﺔ، ﺛﻢ ﻣﺪ ﻳﺪﻳﻪ ﻓﺠﻌﻞ ﻳﻬﺘﻒ ﺑﺮﺑﻪ : " ﺍﻟﻠﻬﻢ ﺃﻧﺠﺰ ﻟﻲ ﻣﺎ ﻭﻋﺪﺗﻨﻲ، ﺍﻟﻠﻬﻢ ﺁﺕ ﻣﺎ ﻭﻋﺪﺗﻨﻲ، ﺍﻟﻠﻬﻢ ﺇﻥ ﺗﻬﻠﻚ ﻫﺬﻩ ﺍﻟﻌﺼﺎﺑﺔ ﻣﻦ ﺃﻫﻞ ﺍﻹﺳﻼﻡ ﻻ ﺗﻌﺒﺪ ﻓﻲ ﺍﻷﺭﺽ " ﻓﻤﺎ ﺯﺍﻝ ﻳﻬﺘﻒ ﺑﺮﺑﻪ ﻣﺎﺩﺍً ﻳﺪﻳﻪ، ﻣﺴﺘﻘﺒﻞ ﺍﻟﻘﺒﻠﺔ، ﺣﺘﻰ ﺳﻘﻂ ﺭﺩﺍﺅﻩ ﻋﻦ ﻣﻨﻜﺒﻴﻪ، ﻓﺄﺗﺎﻩ ﺃﺑﻮ ﺑﻜﺮ، ﻓﺄﺧﺬ ﺭﺩﺍﺀﻩ ﻓﺄﻟﻘﺎﻩ ﻋﻠﻰ ﻣﻨﻜﺒﻴﻪ، ﺛﻢ ﺍﻟﺘﺰﻣﻪ ﻣﻦ ﻭﺭﺍﺋﻪ، ﻭﻗﺎﻝ ﻳﺎ ﻧﺒﻲ ﺍﻟﻠﻪ ! ﻛﻔﺎﻙ ﻣﻨﺎﺷﺪﺗﻚ ﺭﺑﻚ، ﻓﺈﻧﻪ ﺳﻴﻨﺠﺰ ﻟﻚ ﻣﺎ ﻭﻋﺪﻙ ‏[ 2 ‏] .. ﺍﻟﺤﺪﻳﺚ .
யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.
இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.
ﺇِﺫْ ﺗَﺴْﺘَﻐِﻴﺜُﻮﻥَ ﺭَﺑَّﻜُﻢْ ﻓَﺎﺳْﺘَﺠَﺎﺏَ ﻟَﻜُﻢْ ﺃَﻧِّﻲ ﻣُﻤِﺪُّﻛُﻢْ ﺑِﺄَﻟْﻒٍ ﻣِﻦَ ﺍﻟْﻤَﻠَﺎﺋِﻜَﺔِ ﻣُﺮْﺩِﻓِﻴﻦَ
நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:09)
: ﺃﻥ ﺍﻹﻳﻤﺎﻥ ﻭﺍﻟﻌﻤﻞ ﺍﻟﺼﺎﻟﺢ ﻣﻦ ﺃﻋﻈﻢ ﺃﺳﺒﺎﺏ ﺍﻟﻨﺼﺮ؛ ﻭﻟﺬﻟﻚ ﻭﻋﺪ ﺍﻟﻠﻪ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺍﻟﺼﺎﻟﺤﻴﻦ ﺑﺎﻟﻨﺼﺮ ﻓﻲ ﻏﻴﺮ ﺁﻳﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ ﺍﻟﻠﻪ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ ﺇِﻧَّﺎ ﻟَﻨَﻨﺼُﺮُ ﺭُﺳُﻠَﻨَﺎ ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﻓِﻲ ﺍﻟْﺤَﻴَﺎﺓِ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﻳَﻮْﻡَ ﻳَﻘُﻮﻡُ ﺍﻷَﺷْﻬَﺎﺩُ ﴾ ‏[ ﻏﺎﻓﺮ : 51 ].
3, உறுதியான ஈமானும் நல்லமல்களும் வெற்றிக்கான காரணம். இதனை அல்லாஹ் {40 ; 51} ல் குறிப்பிடுகிறான்
: ﺃﻥ ﺍﻟﺘﻮﻛﻞ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ ﻣﻦ ﺃﻋﻈﻢ ﺃﺳﺒﺎﺏ ﺍﻟﻨﺼﺮ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ ﺇِﻥْ ﻳَﻨْﺼُﺮْﻛُﻢْ ﺍﻟﻠَّﻪُ ﻓَﻼ ﻏَﺎﻟِﺐَ ﻟَﻜُﻢْ ﻭَﺇِﻥْ ﻳَﺨْﺬُﻟْﻜُﻢْ ﻓَﻤَﻦْ ﺫَﺍ ﺍﻟَّﺬِﻱ ﻳَﻨْﺼُﺮُﻛُﻢْ ﻣِﻦْ ﺑَﻌْﺪِﻩِ ﻭَﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻓَﻠْﻴَﺘَﻮَﻛَّﻞْ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﴾ ‏[ ﺁﻝ ﻋﻤﺮﺍﻥ : 160 ].
ﻭﻫﺬﺍ ﻣﺎ ﺣﺼﻞ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ، ﻓﺈﻥ ﺍﻟﺼﺤﺎﺑﺔ ﻋﻠﻰ ﻗﻠﺔ ﻋﺪﺩﻫﻢ ﻭﻋُﺪﺩﻫﻢ ﻣﻘﺎﺑﻞ ﻋﺪﻭﻫﻢ ﺇﻻ ﺃﻧﻬﻢ ﺗﻮﻛﻠﻮﺍ ﻋﻠﻰ ﺍﻟﻠﻪ، ﻭﻗﺎﺗﻠﻮﺍ ﻓﻨﺼﺮﻫﻢ ﺍﻟﻠﻪ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ ﻭَﻟَﻘَﺪْ ﻧَﺼَﺮَﻛُﻢْ ﺍﻟﻠَّﻪُ ﺑِﺒَﺪْﺭٍ ﻭَﺃَﻧْﺘُﻢْ ﺃَﺫِﻟَّﺔٌ ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗَﺸْﻜُﺮُﻭﻥَ ﴾ ‏[ ﺁﻝ ﻋﻤﺮﺍﻥ : 123 ].
4, வெற்றி கிடைக்க அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கை வேண்டும்.
உலகத்தின் கண்ணோட்டமும் கணக்கும் எப்போதும் காரண காரியத் தொடர்பினூடாக மட்டுமே இருக்கும். ஈமான் இல்லாத உள்ளங்கள் வெறும் காரண காரிய ஒழுங்கினூடாக மட்டுமே போர் நிலைகளை நோக்குகின்றன. பத்ர் போரையும் அவ்வாறு தான் எடைபோடுகின்றனர்.
உண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பாளிகள், உடலில் பலம் குறைந்தவர்கள், ஆயுத, படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். ஏதிரிகளான மக்காக் காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை,
தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். காபிர்களின் படையுடன் ஒப்பிடும் போது, முஃமின்கள் மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஒரு சிறுவனிடம் எடைபோடச் சொன்னால் கூட,
முஃமின்கள் படை நிச்சியம் தோற்றுவிடும் என்று எவ்விதத் தயக்கமுமின்றியே கூறிவிடுவான்.
ஆனால், அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைத்த ஸஹாபாக்களுக்கு வெற்றி கிடைத்தது.
: ﺃﻥ ﻟﺰﻭﻡ ﻃﺎﻋﺔ ﺍﻷﻣﻴﺮ ﺃﻭ ﺍﻟﻘﺎﺋﺪ، ﻭﻋﺪﻡ ﺍﻻﺧﺘﻼﻑ ﻋﻠﻴﻪ ﻣﻦ ﺃﻋﻈﻢ ﺃﺳﺒﺎﺏ ﺍﻟﻨﺼﺮ، ﻭﻫﺬﺍ ﻣﺎ ﺣﺪﺙ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ، ﻓﺈﻥ ﻣﺤﻤﺪﺍً - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻫﻮ ﺍﻟﺮﺳﻮﻝ، ﻭﻫﻮ ﺍﻟﻘﺎﺋﺪ، ﻭﻛﺎﻧﻮﺍ ﻳﻄﻴﻌﻮﻧﻪ ﻓﻴﻤﺎ ﻳﺄﻣﺮﻫﻢ ﺑﻪ ﻛﻤﺎ ﺗﻘﺪﻡ .
5, அல்லாஹ் ரசூலுக்கு முழுமையாக கட்டுப்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம்.ஸஹாபாக்கள் இந்த போர்க்களத்தில் நபி ஸல் அவர்களின் அனைத்து உத்தரவுகளுக்கும் முழுமையாக கட்டுப்பட்டார்கள்.அதனால் வெற்றிக்கனியைப் பறித்தார்கள்.
ﺃﻥ ﺍﻟﻌﺪﺍﻭﺓ ﻭﺍﻹﺣﻦ ﺍﻟﺘﻲ ﻛﺎﻧﺖ ﺑﻴﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ﻣﻦ ﺍﻷﻭﺱ ﻭﺍﻟﺨﺰﺭﺝ ﻗﺪ ﺯﺍﻟﺖ ﺑﻮﺻﻮﻝ ﺍﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺍﻟﻤﺪﻳﻨﺔ، ﻓﺼﺎﺭﻭﺍ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻢ - ﻳﺪﺍً ﻭﺍﺣﺪﺓ ﺿﺪ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻭﺍﻟﻴﻬﻮﺩ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ ﻭَﺃَﻟَّﻒَ ﺑَﻴْﻦَ ﻗُﻠُﻮﺑِﻬِﻢْ ﻟَﻮْ ﺃَﻧﻔَﻘْﺖَ ﻣَﺎ ﻓِﻲ ﺍﻷَﺭْﺽِ ﺟَﻤِﻴﻌﺎً ﻣَﺎ ﺃَﻟَّﻔْﺖَ ﺑَﻴْﻦَ ﻗُﻠُﻮﺑِﻬِﻢْ ﻭَﻟَﻜِﻦَّ ﺍﻟﻠَّﻪَ ﺃَﻟَّﻒَ ﺑَﻴْﻨَﻬُﻢْ ﺇِﻧَّﻪُ ﻋَﺰِﻳﺰٌ ﺣَﻜِﻴﻢٌ ﴾ ‏[ ﺍﻷﻧﻔﺎﻝ : 63 ].
6, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது
நபியின் மதீனா வருகைக்கு முன்பு அவ்ஸ் கஸ்ரஜ் போன்ற பல்வேறு பிரிவினராக இருந்தவர்கள் ஒன்றிணைந்து ஒரே கரமாக இணைந்து செயல்பட்டார்கள்.அதனால் வெற்றியை ருசித்தார்கள்.
ﺇﻥ ﺍﻹﺧﻼﺹ ﻭﺍﻟﺼﺪﻕ ﻣﻦ ﺃﺳﺒﺎﺏ ﺍﻟﻨﺼﺮ ﻋﻠﻰ ﺍﻷﻋﺪﺍﺀ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ﻭَﻟَﻴَﻨﺼُﺮَﻥَّ ﺍﻟﻠَّﻪُ ﻣَﻦْ ﻳَﻨﺼُﺮُﻩُ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻟَﻘَﻮِﻱٌّ ﻋَﺰِﻳﺰٌ ﴾ ‏[ ﺍﻟﺤﺞ : 40 ].
ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻛُﻮﻧُﻮﺍ ﻣَﻊَ ﺍﻟﺼَّﺎﺩِﻗِﻴﻦَ ﴾ ‏[ ﺍﻟﺘﻮﺑﺔ : 119 ].
ﻭﻓﻲ ﺍﻟﺼﺤﻴﺤﻦ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﺃﺑﻲ ﻣﻮﺳﻰ ﺍﻷﺷﻌﺮﻱ - ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ - ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺳﺌﻞ ﻋﻦ ﺍﻟﺮﺟﻞ ﻳﻘﺎﺗﻞ ﻟﻠﻤﻐﻨﻢ، ﻭﺍﻟﺮﺟﻞ ﻳﻘﺎﺗﻞ ﻟﻠﺬﻛﺮ، ﻭﺍﻟﺮﺟﻞ ﻳﻘﺎﺗﻞ ﻟﻴﺮﻯ ﻣﻜﺎﻧﻪ، ﻓﻤﻦ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ؟ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ :- " ﻣﻦ ﻗﺎﺗﻞ ﻟﺘﻜﻮﻥ ﻛﻠﻤﺔ ﺍﻟﻠﻪ ﻫﻲ ﺍﻟﻌﻠﻴﺎ ﻓﻬﻮ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ 2]" ].
ﻭﻫﺬﺍ ﻣﺎ ﺣﺪﺙ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ، ﻓﺈﻥ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ ﻟﻤﺎ ﺻﺪﻗﻮﺍ ﻣﻊ ﺍﻟﻠﻪ، ﻭﺃﺧﻠﺼﻮﺍ ﻟﻪ ﻛﺎﻥ ﺍﻟﻨﺼﺮ ﺣﻠﻴﻔﻬﻢ .
7, அனைத்து காரியங்களிலும் இக்லாஸ் இருக்க வேண்டும். உண்மையான ஆர்வமும் இருக்க வேண்டும்.
ஸஹாபாக்களிடம் அவைகள் இருந்தது.அதனால் வெற்றியை தனதாக்கினார்கள்.
ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺁﻟﻪ ﻭﺳﻠﻢ - ﻳﻮﻡ ﺑﺪﺭ : " ﻗﻮﻣﻮﺍ ﺇﻟﻰ ﺟﻨﺔ ﻋﺮﺿﻬﺎ ﺍﻟﺴﻤﺎﻭﺍﺕ ﻭﺍﻷﺭﺽ " ﻗﺎﻝ ﻋﻤﻴﺮ ﺑﻦ ﺍﻟﺤﻤﺎﻡ ﺍﻷﻧﺼﺎﺭﻱ : ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ، ﻋﺮﺿﻬﺎ ﺍﻟﺴﻤﺎﻭﺍﺕ ﻭﺍﻷﺭﺽ ، ﺑﺦ ﺑﺦ ، ﻻ ﻭﺍﻟﻠﻪ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻻ ﺑﺪ ﺃﻥ ﺃﻛﻮﻥ ﻣﻦ ﺃﻫﻠﻬﺎ . ﻗﺎﻝ : " ﻓﺈﻧﻚ ﻣﻦ ﺃﻫﻠﻬﺎ " ، ﻓﺄﺧﺮﺝ ﺗﻤﻴﺮﺍﺕ ﻓﺠﻌﻞ ﻳﺄﻛﻞ ، ﺛﻢ ﻗﺎﻝ : ﻟﺌﻦ ﺣﻴﻴﺖ ﺣﺘﻰ ﺁﻛﻞ ﺗﻤﺮﺍﺗﻲ ﺇﻧﻬﺎ ﻟﺤﻴﺎﺓ ﻃﻮﻳﻠﺔ ﻗﺎﻝ : ﻓﺮﻣﻰ ﺑﻤﺎ ﻛﺎﻥ ﻣﻌﻪ ﻣﻦ ﺍﻟﺘﻤﺮ ، ﺛﻢ ﻗﺎﺗﻠﻬﻢ ﺣﺘﻰ ﻗﺘﻞ .
பத்ரு யுத்தத்தின் போது நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ஒரு கூடாரத்தில் அமர்ந்து கொண்டு தமது தோழர்களை நோக்கி, ‘எழுந்திருப்பீராக! வானத்தையும், பூமியையும் விட விசாலமானதும் தக்வா கொண்டவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்டதுமான சுவர்க்கத்தின்பால் விரைவீராக!’ என்று கூறினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஹழ்ரத் உமைர் இப்னு ஹம்மாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
‘ஆஹா, ஆஹா’ என்றனர். அண்ணலார் அவர்கள் உமைரை நோக்கி, எதற்காக ஆஹா ஆஹா என்று கூறினீர் என்றார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அத்தகையவர்களில் நானும் ஒருவனாக இருக்க விருப்பப்படுகின்றேன்’ என்று பதில் கூறினார். உடனே அண்ணலார் அவர்கள் நீரும் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்கள்’ என்றார்கள்.
ஹஜ்ரத் உமைர் ரலியல்லாஹு அன்ஹு ஒரு பையிலிருந்து சில பேரீத்தங்கனிகளைப் பசியின் கொடுமையைத் தணிக்கத் தின்றார்கள். ஓரிரண்டு கனிகளைத் தின்றதும் அவர்கள் கையிலிருக்கும் கனிகளைத் தின்று தீர்க்கும் வரை காத்திருப்பதென்பது இவ்வுலகில் நீண்ட காலம் ஜீவித்திருப்பதைப் போலிருக்கிறது. எனக்கு அதுவரை என்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்’ என்று கூறியவாறு கையிலிருந்த கனிகளை தூர எறிந்து விட்டு கரத்திலே வாளேந்தி பத்ரு போரிலே உடலை விட்டு உயிர் பிரியும் வரை போராடி ஷஹீதாய் விட்டார்கள்.
8, மய்யித் இறந்து விட்டாலும் அவர்களால் கேட்க முடியும்.மேலே நடப்பவற்றை உணர முடியும் என்பது இந்த பத்ரின் மூலம் நிரூபணமானது.
: ﻓﻲ ﻭﻗﻮﻑ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻋﻠﻰ ﻓﻢ ﺍﻟﻘﻠﻴﺐ ﻳﻨﺎﺩﻱ ﻗﺘﻠﻰ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ، ﻭﻳﻜﻠﻤﻬﻢ ﺑﻌﺪﻣﺎ ﻣﺎﺗﻮﺍ، ﻭﻓﻴﻤﺎ ﻗﺎﻟﻪ ﻟﻌﻤﺮ - ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ - ﺇﺫ ﺫﺍﻙ ﺩﻟﻴﻞ ﻭﺍﺿﺢ ﻋﻠﻰ ﺃﻥ ﻟﻠﻤﻴﺖ ﺣﻴﺎﺓ ﺭﻭﺣﻴﺔ ﺧﺎﺻﺔ ﺑﻪ، ﻓﻘﺪ ﺛﺒﺖ ﺑﺎﻟﻜﺘﺎﺏ ﻭﺍﻟﺴﻨﺔ ﻋﺬﺍﺏ ﺍﻟﻘﺒﺮ ﻭﻧﻌﻴﻤﻪ، ﻭﺃﻥ ﺍﻟﻤﻴﺖ ﺇﺫﺍ ﻭﺿﻊ ﻓﻲ ﻗﺒﺮﻩ، ﻭﺗﻮﻟﻰ ﻋﻨﻪ ﺃﺻﺤﺎﺑﻪ، ﺃﻧﻪ ﻳﺴﻤﻊ ﻗﺮﻉ ﻧﻌﺎﻟﻬﻢ، ﻏﻴﺮ ﺃﻥ ﺫﻟﻚ ﻛﻠﻪ ﺇﻧﻤﺎ ﻳﺨﻀﻊ ﻟﻤﻮﺍﺯﻳﻦ ﻻ ﺗﻨﻀﺒﻂ ﺑﻌﻘﻮﻟﻨﺎ، ﻭﺇﺩﺭﺍﻛﻨﺎ ﺍﻟﺪﻧﻴﻮﻳﺔ ﻫﺬﻩ، ﺇﺫ ﻫﻮ ﻣﺎ ﻳﺴﻤﻰ ﺑﻌﺎﻟﻢ ﺍﻟﻐﻴﺐ ﺍﻟﺒﻌﻴﺪ ﻋﻦ ﻣﺸﺎﻫﺪﺍﺗﻨﺎ، ﻭﺗﺠﺎﺭﺑﻨﺎ ﺍﻟﻌﻘﻠﻴﺔ ﻭﺍﻟﻤﺎﺩﻳﺔ، ﻓﻄﺮﻳﻖ ﺍﻹﻳﻤﺎﻥ ﺑﻬﺎ ﺇﻧﻤﺎ ﻫﻮ ﺍﻟﺘﺴﻠﻴﻢ ﻟﻬﺎ ﺑﻌﺪ ﺃﻥ ﻭﺻﻠﺘﻨﺎ ﺑﻄﺮﻳﻖ ﺛﺎﺑﺖ ﺻﺤﻴﺢ
ﺭﻭﻯ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻭﻣﺴﻠﻢ ﻓﻲ ﺻﺤﻴﺤﻴﻬﻤﺎ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ - ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ - ﻋﻦ ﺃﺑﻲ ﻃﻠﺤﺔ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺃﻣﺮ ﻳﻮﻡ ﺑﺪﺭ ﺑﺄﺭﺑﻌﺔ ﻭﻋﺸﺮﻳﻦ ﺭﺟﻼً ﻣﻦ ﺻﻨﺎﺩﻳﺪ ﻗﺮﻳﺶ، ﻓﻘﺬﻓﻮﺍ ﻓﻲ ﻃﻮﻱ ‏[ 2 ‏] ﻣﻦ ﺃﻃﻮﺍﺀ ﺑﺪﺭ ﺧﺒﻴﺚ ﻣﺨﺒﺚ، ﻭﻛﺎﻥ ﺇﺫﺍ ﻇﻬﺮ ﻋﻠﻰ ﻗﻮﻡ، ﺃﻗﺎﻡ ﺑﺎﻟﻌﺮﺻﺔ ﺛﻼﺙ ﻟﻴﺎﻝ، ﻓﻠﻤﺎ ﻛﺎﻥ ﺑﺒﺪﺭ ﺍﻟﻴﻮﻡ ﺍﻟﺜﺎﻟﺚ ﺃﻣﺮ ﺑﺮﺍﺣﻠﺘﻪ ﻓﺸﺪﺕ ﻋﻠﻴﻬﺎ ﺭﺣﻠﻬﺎ، ﺛﻢ ﻣﺸﻰ، ﻭﺍﺗﺒﻌﻪ ﺃﺻﺤﺎﺑﻪ، ﻭﻗﺎﻟﻮﺍ : ﻣﺎ ﻧﺮﻯ ﻳﻨﻄﻠﻖ ﺇﻻ ﻟﺒﻌﺾ ﺣﺎﺟﺘﻪ، ﺣﺘﻰ ﻗﺎﻡ ﻋﻠﻰ ﺷﻔﺔ ﺍﻟﺮﻛﻲ ‏[ 3 ‏] ﻓﺠﻌﻞ ﻳﻨﺎﺩﻳﻬﻢ ﺑﺄﺳﻤﺎﺋﻬﻢ ﻭﺃﺳﻤﺎﺀ ﺁﺑﺎﺋﻬﻢ : " ﻳﺎ ﻓﻼﻥ ﺑﻦ ﻓﻼﻥ ﻭﻳﺎ ﻓﻼﻥ ﺑﻦ ﻓﻼﻥ، ﻭﻳﺎ ﻓﻼﻥ ﺑﻦ ﻓﻼﻥ، ﺃﻳﺴﺮﻛﻢ ﺃﻧﻜﻢ ﺃﻃﻌﺘﻢ ﺍﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ؟ ﻓﺈﻧﺎ ﻗﺪ ﻭﺟﺪﻧﺎ ﻣﺎ ﻭﻋﺪﻧﺎ ﺭﺑﻨﺎ ﺣﻘﺎً ﻓﻬﻞ ﻭﺟﺪﺗﻢ ﻣﺎ ﻭﻋﺪ ﺭﺑﻜﻢ ﺣﻘﺎً؟ " ﻗﺎﻝ : ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ : ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻣﺎ ﺗﻜﻠﻢ ﻣﻦ ﺃﺟﺴﺎﺩ ﻻ ﺃﺭﻭﺍﺡ ﻟﻬﺎ؟ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ :- " ﻭﺍﻟﺬﻱ ﻧﻔﺲ ﻣﺤﻤﺪ ﺑﻴﺪﻩ ﻣﺎ ﺃﻧﺘﻢ ﺑﺄﺳﻤﻊ ﻟﻤﺎ ﺃﻗﻮﻝ ﻣﻨﻬﻢ ." ﻗﺎﻝ ﻗﺘﺎﺩﺓ : ﺃﺣﻴﺎﻫﻢ ﺍﻟﻠﻪ ﺣﺘﻰ ﺃﺳﻤﻌﻬﻢ ﻗﻮﻟﻪ ﺗﻮﺑﻴﺨﺎً ﻭﺗﺼﻐﻴﺮﺍً، ﻭﻧﻘﻴﻤﺔ، ﻭﺣﺴﺮﺓ ﻭﻧﺪﻣﺎً ‏[ 4 ].
ﻭﻓﻲ ﺭﻭﺍﻳﺔ ﻟﻠﻨﺴﺎﺋﻲ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻗﺎﻝ : ﺳﻤﻊ ﺍﻟﻤﺴﻠﻤﻮﻥ ﻣﻦ ﺍﻟﻠﻴﻞ ﺑﺒﺌﺮ ﺑﺪﺭ، ﻭﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻗﺎﺋﻢ ﻳﻨﺎﺩﻱ : " ﻳﺎ ﺃﺑﺎ ﺟﻬﻞ ﺑﻦ ﻫﺸﺎﻡ، ﻭﻳﺎ ﺷﻴﺒﺔ ﺑﻦ ﺭﺑﻴﻌﺔ ".... ﺍﻟﺤﺪﻳﺚ
குறைஷிக் காபிர்களில் 70 பேர் மடிந்தார்கள். இந்த சடலங்களை பத்ரு என்ற கிணற்றில் போட்டு மறைக்கும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படி செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்கிணற்றுக்கு சென்று செத்த மய்யித்துகளிடம் பேசினார்கள்.
அபூஜஹலே, உமையாவே, உத்பாவே எங்களுக்கு எங்கள் நாயன் சொன்ன வாக்குறுதியை உண்மையாகவே பெற்றுக் கொண்டோம். உங்களின் கடவுள்களின் வாக்குறுதியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா? நீங்கள் எங்களுக்கு செய்த பலவித இன்னல்கள் துன்பங்கள் இவைகளுக்குரிய தண்டனையை இப்பொழுது பெறுகிறீர்கள். இப்பொழுதாவது என்னைப் பற்;றியும் நான் சொன்ன ஆண்டவனைப் பற்றியும் விளங்கிக் கொண்டீர்களா? என்று கேட்ட போது,
அவர்கள் அருகில் நின்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகமே! மரணித்து விட்டவர்கள் எப்படி உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள்?
என்று வினவ அதற்கு நாயகம் அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல முடியும். அவர்களுக்கு பதிலுரைக்க முடியாது. இதுதான் உங்களிருவருக்கும் உள்ள வித்தியாசம் என்று சொன்னார்கள்.
9, உண்மையான ஈமானும் நம்பிக்கையும் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.அங்கே பத்ரு களத்தில் அல்லாஹ் மலக்குமார்கள், சிறு தூக்கம்,மழை,எதிர்களுக்கு அச்சம் போன்ற விஷயங்களைக் கொண்டு உதவி செய்தான்.
: ﺃﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻗﺪ ﻳﻌﻴﻦ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ ﻓﻲ ﻗﺘﺎﻝ ﺃﻋﺪﺍﺋﻬﻢ ﺑﺒﻌﺾ ﺍﻟﻜﺮﺍﻣﺎﺕ، ﺇﺫﺍ ﺻﺪﻗﻮﺍ ﻣﻌﻪ، ﻛﻤﺎ ﺣﺪﺙ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ ﻣﻦ ﻧﺰﻭﻝ ﺍﻟﻤﻼﺋﻜﺔ، ﻭﺣﺪﻭﺙ ﺍﻟﻨﻌﺎﺱ، ﻭﺇﻧﺰﺍﻝ ﺍﻟﻤﻄﺮ، ﻭﻗﺬﻑ ﺍﻟﺮﻋﺐ ﻓﻲ ﻗﻠﻮﺏ ﻋﺪﻭﻫﻢ، ﻭﻏﻴﺮﻫﺎ ﻣﻦ ﺍﻟﻤﻌﺠﺰﺍﺕ ﻭﺍﻟﻜﺮﺍﻣﺎﺕ
10, இறை மறுப்பும் பாவங்களும் அல்லாஹ்வின் நிஃமத்துகள் நீங்குவதற்கும் தண்டனைகள் இறங்குவதற்கும் காரணமாக அமைந்து விடும்.நபி ஸல் அவர்கள் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் நிஃமத்.ஆனால் அதை அவர்கள் நிராகரித்தார்கள்.அதனால் பத்ரில் அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை கொடுத்தான்.
: ﺃﻥ ﺍﻟﻜﻔﺮ ﻭﺍﻟﻤﻌﺎﺻﻲ ﺳﺒﺐ ﻟﺰﻭﺍﻝ ﺍﻟﻨﻌﻢ، ﻭﺣﺼﻮﻝ ﺍﻟﻨﻘﻢ، ﻓﺈﻥ ﻗﺮﻳﺸﺎً ﻟﻤﺎ ﻛﻔﺮﻭﺍ ﻧﻌﻤﺔ ﺍﻟﻠﻪ ﺑﺈﺭﺳﺎﻝ ﻫﺬﺍ ﺍﻟﻨﺒﻲ ﺍﻟﻜﺮﻳﻢ ﺇﻟﻴﻬﻢ ﻓﻜﺬﺑﻮﻩ ﻭﻋﺎﺩﻭﻩ، ﻋﺎﻗﺒﻬﻢ ﺍﻟﻠﻪ ﻓﻲ ﻏﺰﻭﺓ ﺑﺪﺭ ﺑﺎﻟﻘﺘﻞ ﻭﺍﻷﺳﺮ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ : ﴿ ﺃَﻟَﻢْ ﺗَﺮَﻯ ﺇِﻟَﻰ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺑَﺪَّﻟُﻮﺍ ﻧِﻌْﻤَﺔَ ﺍﻟﻠَّﻪِ ﻛُﻔْﺮﺍً ﻭَﺃَﺣَﻠُّﻮﺍ ﻗَﻮْﻣَﻬُﻢْ ﺩَﺍﺭَ ﺍﻟْﺒَﻮَﺍﺭِ ﴾ ‏[ ﺇﺑﺮﺍﻫﻴﻢ :
ﺭﻭﻯ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻓﻲ ﺻﺤﻴﺤﻪ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ - ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ - ﻗﺎﻝ : ﴿ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺑَﺪَّﻟُﻮﺍ ﻧِﻌْﻤَﺔَ ﺍﻟﻠَّﻪِ ﻛُﻔْﺮﺍً ﴾، ﻗﺎﻝ : ﻫﻢ ﻭﺍﻟﻠﻪ ﻛﻔﺎﺭ ﻗﺮﻳﺶ، ﻗﺎﻝ ﻋﻤﺮﻭ : ﻫﻢ ﻗﺮﻳﺶ، ﻭﻣﺤﻤﺪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻧﻌﻤﺔ ﺍﻟﻠﻪ، ﴿ ﻭَﺃَﺣَﻠُّﻮﺍ ﻗَﻮْﻣَﻬُﻢْ ﺩَﺍﺭَ ﺍﻟْﺒَﻮَﺍﺭِ ﴾ ﻗﺎﻝ ﺍﻟﻨﺎﺭ، ﻳﻮﻡ ﺑﺪﺭ 4]" ].
11, நபி ஸல் அவர்களது மறைவானதை அறியும் ஆற்றல் இந்த பத்ரில் வெளிப்பட்டது.
ﻗﺎﻝ ﺃﻧﺲ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻫﺬﺍ ﻣﺼﺮﻋﻔﻼﻥ ﻏﺪﺍ ﻭﻭﺿﻊ ﻳﺪﻩ ﻋﻠﻰ ﺍﻷﺭﺽ ﻭﻫﺬﺍ ﻣﺼﺮﻉ ﻓﻼﻥ ﻏﺪﺍ ﻭﻭﺿﻊ ﻳﺪﻩ ﻋﻠﻰ ﺍﻷﺭﺽ ﻭﻫﺬﺍ ﻣﺼﺮﻉ ﻓﻼﻥ ﻏﺪﺍ ﻭﻭﺿﻊ ﻳﺪﻩ ﻋﻠﻰ ﺍﻷﺭﺽ ﻓﻘﺎﻝ ﻭﺍﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ ﻣﺎ ﺟﺎﻭﺯ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ ﻋﻦ ﻣﻮﺿﻊ ﻳﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺄﻣﺮ ﺑﻬﻢ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺄﺧﺬ ﺑﺄﺭﺟﻠﻬﻢ ﻓﺴﺤﺒﻮﺍ ﻓﺄﻟﻘﻮﺍ ﻓﻲ ﻗﻠﻴﺐ ﺑﺪﺭ
ஹழரத் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு யுத்தம் நிகழ்வதற்கு முன் அந்தப் போரில் இறந்து போகக் கூடிய சிலரின் பெயர்களையும் அவர்கள் பத்ரு களத்தில் இன்ஷாஅல்லாஹ் இன்னின்ன இடங்களில் இறப்பார்கள் என்பதையும் தங்களின் கையிலுள்ள அசாவினால் கோடு போட்டுக் காட்டினார்கள்.
இதை ஹழரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: முதல் நாள் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளில் யார் யார் எவ்விடங்களில் கொல்லப்படுவார்கள் என்பதைக் கோடு போட்டுக் காண்பித்தார்களோ அவரவர்கள் அவ்வவ்விடங்களில் கொல்லப்பட்டார்கள். இதை என் கண்ணால் பார்த்தேன் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய இடங்களிலிருந்து ஒரு சிறு துரும்பளவாவது கூட கொல்லப்பட்ட இடங்கள் மாறவில்லை. இதுவும் பத்ரு யுத்தத்தில் நடந்த மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாகும். – முஸ்லிம்.
12, பெருமையும் மமதையும் கொண்டு திரிபவர்கள் மிக அர்ப்பமாக கொல்லப்படுவார்கள்.அபூஜஹ்ல் சாதாரண சிறுவர்களால் கொல்லப் பட்டான்.
ﻓﻲ ﻳﻮﻡ ﺑﺪﺭ ﻭﺑﻴﻨﻤﺎ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ ﻭﺍﻗﻒ ﻓﻲ ﺍﻟﺼﻒ ﺇﺫﺍ ﻫﻮ ﺑﻐﻼﻣﻴﻦ ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ﺣﺪﻳﺜﺔ ﺃﺳﻨﺎﻧﻬﻤﺎ ﻳﻘﻮﻝ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ : ﺗﻤﻨﻴﺖ ﺃﻥ ﺃﻛﻮﻥ ﺑﻴﻦ ﺃﺿﻠﻊ ﻣﻨﻬﻤﺎ .
ﻓﻐﻤﺰﻧﻲ ﺃﺣﺪﻫﻤﺎ ﻓﻘﺎﻝ : ﻳﺎ ﻋﻢ ! ﺃﺗﻌﺮﻑ ﺃﺑﺎ ﺟﻬﻞ ؟ ﻗﻠﺖ : ﻧﻌﻢ ، ﻭﻣﺎ ﺣﺎﺟﺘﻚ ؟ ﻗﺎﻝ : ﺃﺧﺒﺮﺕ ﺃﻧﻪ ﻳﺴﺐ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ، ﻭﺍﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ ﺇﻥ ﺭﺃﻳﺘﻪ ﻻ ﻳﻔﺎﺭﻕ ﺳﻮﺍﺩﻱ ﺳﻮﺍﺩﻩ ﺣﺘﻰ ﻳﻤﻮﺕ ﺍﻷﻋﺠﻞ ﻣﻨﺎ .
ﻓﺘﻌﺠﺒﺖ ﻟﺬﻟﻚ ، ﻓﻐﻤﺰﻧﻲ ﺍﻵﺧﺮ ﻓﻘﺎﻝ ﻣﺜﻠﻬﺎ ، ﻓﻠﻢ ﺃﻧﺸﺐ ﺃﻥ ﻧﻈﺮﺕ ﺇﻟﻰ ﺃﺑﻲ ﺟﻬﻞ ﻭﻫﻮ ﻳﺠﻮﻝ ﻓﻲ ﺍﻟﻨﺎﺱ ﻓﻘﻠﺖ : ﺃﻻ ﺗﺮﻳﺎﻥ ؟ ﻫﺬﺍ ﺻﺎﺣﺒﻜﻤﺎ، ﻗﺎﻝ : ﻓﺎﺑﺘﺪﺭﺍﻩ ﺑﺴﻴﻔﻴﻬﻤﺎ ﺣﺘﻰ ﻗﺘﻼﻩ ، ﺛﻢ ﺍﻧﺼﺮﻓﺎ ﺇﻟﻰ ﺍﻟﻨﺒﻲ ﻓﺄﺧﺒﺮﺍﻩ . ﻓﻘﺎﻝ : ﺃﻳﻜﻤﺎ ﻗﺘﻠﻪ ؟ ﻓﻘﺎﻝ ﻛﻞ ﻣﻨﻬﻤﺎ : ﺃﻧﺎ ﻗﺘﻠﺘﻪ .
ﻓﻘﺎﻝ : ﻫﻞ ﻣﺴﺤﺘﻤﺎ ﺳﻴﻔﻴﻜﻤﺎ ؟ ﻗﺎﻻ : ﻻ . ﻓﻨﻈﺮ ﻓﻲ ﺍﻟﺴﻴﻔﻴﻦ ﻓﻘﺎﻝ : ﻛﻼﻛﻤﺎ ﻗﺘﻠﻪ . ﻭﻗﻀﻰ ﺑﺴﻠﺒﻪ ﻟﻤﻌﺎﺫ ﺑﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺍﻟﺠﻤﻮﺡ . ﻭﻛﺎﻥ ﺍﻵﺧﺮ ﻫﻮ ﻣﻌﺎﺫ ﺑﻦ ﻋﻔﺮﺍﺀ .
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன்.
அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.
சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி0 சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி)
அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) அவர்களும் ஆவர். புகாரீ
3141

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...