♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣
【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.
وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَۚ ۙ
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.. [அல்குர்ஆன் 56:10.]
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ، الصِّحَّةُ وَالْفَرَاغُ
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு (புஹாரி6412)
【♣ துவக்கவுரை: المقد مة INTRODUCTION ♣】
அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [ جمادى الأولى] ஜுமாதல் ஊலா மாதத்தின் நான்காம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
அன்புள்ளவர்களே! போன வார ஜுமுஆவுடைய பேருரையில் :-
2020 – ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் ஜுமுஆவுடைய நாள் வந்ததால்… 2020 – ம் ஆண்டில் நாம் எப்படி அமல் செய்தோம்? என்றும்
2021 – ஆண்டில் நாம் எப்படி அமல் செய்யப்போகிறோம்? என்றும் நம் வாழ்க்கையை கணக்கு போட்டு [احتساب] “இஹ்திஸாப்” செய்து பார்த்தோம். கைர் அல்ஹம்துலில்லாஹ்.
ஆக இன்றைய ஜுமுஆவுடைய பேருரையில் :-
அமல் செய்யும் வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும்போது அதனை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? சம்பந்தமாகவும்;
ஸஹாபாக்கள் – நல்லடியார்கள் – சூஃபியாக்கள் – தனக்கு அமல் செய்யும் வாய்ப்புகள் கிடைத்த போது அவ்வாய்ப்புகளை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள்! சம்பந்தமாகவும் இன்றைய ஜுமுஆ உரையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்……
அன்புள்ளவர்களே! நாம் பள்ளியில் படிக்கும் போது; நாம் நல்லமுறையில் படிக்க வேண்டும் என்பதற்க்காக ஆசிரிய பெருந்தகை அவர்கள் அடிக்கடி நமக்கு “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழியை உபதேசிப்பதை நாம் கேள்விபட்டிருப்போம்.
【காற்றுள்ள போதே தூற்றிக்கொள்】 நெற்கதிர்களை அறுத்து அதனைக் களத்தில் அடித்துப் பதரினைப் போக்கக் காற்றுவீசும்போது தூற்றுதல் வேண்டும். அவ்வாறு தூற்றினால் பதறினைக் காற்று அடித்துத் தூரத்தில் கொண்டுசென்று போட்டுவிடும். நல்ல நெல்மணிகள் தனியாக ஒதுங்கும்.
காற்றடிக்காத போது நெல்லைத் தூற்றினால் பதரானது அப்படியே நல்ல நெல்மணிகளுடன் கலந்து அப்படியே இருக்கும். அதுபோலவே மனிதன் வாய்ப்புகள் இருக்கம்போது கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற இப்பழமொழி ஓர் அழகிய கருத்துக்கள் நிறைந்த பழமொழியாகும். இப்பழமொழி நமக்கு 2 விதமான செய்திகளை / பாடங்களை கற்றுத்தருகிறது. அதாவது
- வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனை நாம் நமது நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ”காற்றுள்ள போதே” [இந்த உடலில் மூச்சுக் காற்று இருக்கும் போதே] தூற்றிக்கொள் [நல்ல செயல்களை செய்ய வேண்டும்] என்பதாகும்.
அன்புள்ளவர்களே! இந்த உலகில் சாதனையாளர்கள் தலைசிறந்த கல்வியாளர்களிடம் சென்று நீங்கள் எப்படி வாழ்கையில் முன்னேரினீர்கள்? என்று கேட்டுப்பாருங்கள். அதற்க்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில்; நாங்கள் எங்கள் வாழ்கையில் முன்னேற ஒரு சந்தர்ப்பம் / வாய்ப்பு கிடைத்தது அதனை பயன்படுத்தினோம் அதனால் முன்னேரினோம் என்று கூறுவார்கள். அது போல நாமும் ஈறுலக வாழ்விலும் முன்னேர நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் / வாய்ப்புகளை அமல் செய்வதின் மூலமாக முன்னேரிடுவோமாக!
அல்லாஹ் ﷻ பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் அதன் வழிபடி வாழ அருள்புரிவானாக! ஆமீன் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
【அமல் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் உடனே அதனை செய்திடு…】
அன்புள்ளவர்களே! நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட.. முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிறுத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான்.
காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள்; அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான். ஒருவர் நஃபிலான தொழுகையை தொழாதவராக இருப்பார்; தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே நஃபிலான தொழுகையை தொழுதிட வேண்டும்.
அப்பறமா தொழுவோம் .. நாளைக்கு தொழுவோம் .. என்று சொல்லி நமக்கு நாமே ஏமாத்தி கொள்ள கூடாது.
நாளை முதல் அதையும் தொழுவதற்கு தொடங்கிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அலாரத்தை வைத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்து தொழுதிட வேண்டும்.
இன்னாருக்கு இன்னத் தேவைக்காக இவ்வளவு பணம் / பொருள் கொடுத்து உதவிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே தாமதிக்காமல் கொடுத்து உதவிட வேண்டும்.
【நம் நபியிக்கு நன்மை செய்ய வாய்ப்பு கிடைத்ததும் உடனே அதனைவிரைவு படுத்திய செயலை பாருங்கள்!】
நம் நபியிடம் (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று இருந்தது. அது தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்ததும் [அதை அப்பரமா செய்யலாம் என்று எண்ணாமல்] உடனே தாமதிக்காமல் அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தார்கள்.
عَنْ عُقْبَةَ، قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ “” ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ “”
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ புகாரி (851)
【ஸஹாபாக்களுக்கு நன்மை செய்ய வாய்ப்பு கிடைத்ததும் உடனே அதனைவிரைவு படுத்திய செயலை பாருங்கள்!】
ஒரு ஸஹாபி உஹுதுப் போர் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நான் அதில் சீக்கரம் கலந்து கொள்ள வேண்டும். ஷஹீதின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆசை அவர் மீது அதிகமாக இருந்தது. [கொஞ்சம் கூட்டம் குறையட்டும் என்று தாமதிக்க வில்லை]
جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا قَالَ “” فِي الْجَنَّةِ فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ.
உஹுதுப் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார். புகாரி (4046)
عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ أَعْرَابِيّاً أَتَي النَّبِيَّؐ فَقَالَ: دُلَّنِي عَلَي عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: تَعْبُدُ اللّٰهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئاً، وَتُقِيمُ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ، قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَي هذَا، فَلَمَّا وَلَّي قَالَ النَّبِيُّؐ : مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَي رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَي هذَا. رواه البخاري
“கிராமவாசி யொருவர், அருமை நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து, “அல்லாஹ்வின் திருத்தூதரே, என்னைச் சுவனத்தில் நுழையச் செய்யும் செயலைக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார். “அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு யாரையும் இணையாக்காதிருப்பீராக! பர்ளுத் தொழுகைகளை நிலை நிறுத்துவீராக! பர்ளான ஸகாத்தை நிறைவேற்றுவீராக! ரமளான் மாதம் நோன்பு வைப்பீராக!’ என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி, “என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை! (தாங்கள் கூறிய அமல்களை சொன்னபடி செய்து வருவேன்) இவற்றில் எதையும் அதிகரிக்கமாட்டேன்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். “யாரேனும் சுவனவாசியைக் காணவிரும்பினால் இவரைக் கண்டு கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5983)
- மது ஹராம் என்று சொன்னதும் மது ஆறு தெருவில் ஓடியது.
- வட்டி ஹராம் என்று சொன்னது அவ்வட்டியை தள்ளுபடி செய்தது.
【நமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்தால் கிடைக்கும் தண்டைனைகள்】
அன்புள்ளவர்களே! இன்றைய காலையில் நாம் சுப்ஹு தொழுகையை தவற விட்டோம் என்றால் அந்த தொழுகை + அதே நன்மை இந்த நேரத்தில் எத்தனை நேரம் தொழுதாலும் கிடைக்குமா?
【நமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்த அபூதாலிப்】
عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ لِعَمِّهِ : قُلْ لاَ إِلهَ إِلاّ اللهُ، أَشْهَدُ لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ، قَالَ: لَوْ لاَ أَنْ تُعَيِّرَنِي قُرَيْشٌ يَقُولُونَ: إِنَّمَا حَمَلَهُ عَلي ذلِكَ الْجَزَعُ لأَقْرَرْتُ بِهَا عَيْنَيْكَ، فَأَنْزَلَ اللهُ: (إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلكِنَّ اللهَ يَهْدِي مَنْ يَشَآءُ۞) الآية. رواه مسلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை (அபூதாலிப் அவர்களிடம், அவரது மரண நேரத்தில்) தாங்கள் லாஇலாஹ இல்லல்லாஹு” என்ற கலிமா சொல்லிவிடுங்கள், நான் கியாமத் நாளில் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன்” என்று சொன்னபோது, அபுதாலிப் மரணத்திற்குப் பயந்து கலிமாச் சொல்லிவிட்டாரென்று குறைஷியர்கள் குத்திப் பேசுவார்கள் என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால், நிச்சயமாக நான் கலிமாச் சொல்லி உம்முடைய கண்களைக் குளிரவைத்துவிடுவேன்” என்று கூறினார். அப்பொழுது, (إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلكِنَّ اللهَ يَهْدِي مَنْ يَشَآءُ) நபியே, நீங்கள் விரும்புபவர்களுக்கு நேரான வழியைக் கொடுக்க முடியாது, அல்லாஹுதஆலா தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் கொடுப்பான்” என்ற ஆயத்தை அல்லாஹுதஆலா இறக்கி வைத்தான்”. (முஸ்லிம்)
【நமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்த ஹாஜி】
مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ ، فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّارواه الترمذي (812) ، والبزار (861)
எவர் ஹஜ்ஜை நிறைவேற்றத் தேவையான அளவு பொருளை அல்லது வாகனத்தை பெற்றிருந்தும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் ஒரு யூதனாக அல்லது கிருஸ்துவனாக மரணிக்கட்டும்.
【பிற்காலத்தில் யோசித்து வருந்தும் முன் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திடு..】
அன்புள்ளவர்களே! இவ்வுலகில் பிறந்து வளர்ந்து வாழும் பாக்கியம் / வாய்பு நமக்கு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தாவிட்டால் நம்மை போல் அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவர் யாரும் இருக்க முடியாது.ஆக இதுவரை தவறில் மூழ்கிஇருந்தோம். இனி இறைதவத்தில் மூழ்குவோம்.
சிலருக்கு ஹஜ்ஜுக்கு போக வசதி வாய்ப்பு இருந்தாலும் போக முடிவதில்லை. ஆனால் அல்லாஹ் எனக்கு ஹஜ் செய்யும் பாக்கியம் கொடுத்துள்ளான்.என நினைத்து கவனமாக & பேணுதலாக ஹஜ்ஜின் அமல்கள செய்ய வேண்டும். ஹஜ்ஜை விட்டுப் பிரிந்தபிறகுதான் நாம் யோசிக்கின்றோம் ஐயோ! நான் ஹஜ்ஜுடைய நாட்களை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டேனே! அடுத்து ஹஜ்ஜுடைய பாக்கியம் பெற நான் உயிருடன் இருப்பேனா? என்று கூட எனக்குத் தெரியவில்லையே ! என்று புலம்பித் திரியாமல் செய்யும் போதே திருந்த செய்ய வேண்டும். ஹஜ்ஜின் நாட்களை சிறப்பாகப் பயன்படுத்துமாக!.
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். {அல்குர்ஆன் 63:10.}
மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் – ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்). {அல்குர்ஆன் 32:12.}
நேரம் வீணாக பேகிறது:
#வாழ்க்கையே கணக்கு..! கணக்கே வாழ்க்கை..!
#வயது 10 முதல் 25 வரை :
தீய பழக்கங்களை குறைத்துக் கொள் (கழித்தல்)
நல்ல பழக்கங்களை கூட்டிக் கொள் (கூட்டல்)
திறமையை பெருக்கிக் கொள் (பெருக்கல்)
நல்ல வாழ்க்கையை வகுத்துக் கொள் (வகுத்தல்)
#வயது 26 முதல் 40 வரை :
செலவை குறைத்துக் கொள் (கழித்தல்)
வருமானத்தை கூட்டிக் கொள் (கூட்டல்)
சேமிப்பை பெருக்கிக் கொள் (பெருக்கல்)
செழிப்பான வாழ்க்கையை வகுத்துக் கொள் (வகுத்தல்)
#வயது 41 முதல் 55 வரை :
உணவை குறைத்துக் கொள் (கழித்தல்)
நடையை கூட்டிக் கொள் (கூட்டல்)
சிரிப்பை பெருக்கிக் கொள் (பெருக்கல்)
உடல் ஆரோக்கியத்திற்கான வழியை வகுத்துக் கொள் (வகுத்தல்)
#55 வயதுக்கு மேல்…
பேராசையை, கோபத்தை, பகைமையை குறைத்துக் கொள் (கழித்தல்)
அன்பை கூட்டிக் கொள் (கூட்டல்)
ஆன்மீகத்தை பெருக்கிக் கொள் (பெருக்கல்)
நோயற்ற வாழ்வை வாழ வழி வகுத்துக் கொள் (வகுத்தல்)
【 சபதம் எடுங்கள்】
அன்புள்ளவர்களே! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் வரைக்கும் கிடைத்த நேரங்களை அமலின் மூலம் பயனுள்ளதாக்குவேன். என்று..
ஆக அல்லாஹ் ﷻ அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்.
நன்றியுரை:-
எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் ﷻ இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் ﷻ மிக்க அறிந்தவன்.
இக்குறிப்புரை வெளி வர உதவி செய்த அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும், பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா.
No comments:
Post a Comment