Monday, 2 March 2026

(நோன்பு 13) ரமளானில் தர்மம் செய்வதன் சிறப்பு



ரமளானில் தர்மம் செய்வதன் சிறப்பு

நாளும் ஒரு நபிமொழி 🌙 (ரமளான் சிறப்பு - நாள் 13)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَأَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். அதிலும் குறிப்பாக ரமளான் மாதம் வந்துவிட்டால் அவர்களின் கொடைத்தன்மை (வள்ளல்தன்மை) மிக அதிகமாக இருக்கும்."
(ஆதாரம்):
நூல்: ஸஹீஹ் புகாரி | எண்: 1902

ரமளான் மாதம் என்பது இறைவனை வணங்குவதற்கான மாதம் மட்டுமல்ல; வறியவர்களுக்கு வாரி வழங்கும் மாதமும்கூட. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவாகவே தர்மம் செய்வதில் சிறந்தவர்களாக இருந்தார்கள். ஆனால், ரமளான் மாதம் வந்துவிட்டால், வேகமாக வீசும் காற்றை விட அதிவேகமாகத் தர்மம் செய்யக்கூடியவர்களாக மாறிவிடுவார்கள் என்று ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.

இந்த புனித மாதத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் பலமடங்கு கூலி உண்டு. எனவே, இந்த நாட்களில் நம்மால் இயன்ற அளவு ஏழைகளுக்கு உதவி செய்தும், தர்மங்கள் (சதகா) கொடுத்தும் நபிகளாரின் சுன்னத்தை உயிர்ப்பிப்போம். அல்லாஹ் நம் தான தர்மங்களை ஏற்று, பரக்கத் செய்வானாக! ஆமீன்.

விருதுநகர் மாவட்டம்
நோன்பு 11 முதல் 15 வரை
🌙 ஸஹர் முடிவு: 4:57 AM | 🌞 இஃப்தார்: 6:33 PM

என்றும் தங்கள் துஆவை ஆதரவு வைக்கும்
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி
இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜை.
▶️ YouTube: RAJAI AALIM MEDIA


Share & Earn Rewards!
பிறருக்கும் பகிர்ந்து நன்மை பெறுங்கள்.

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...