ராஜபாளையம் TNTJ நாடகமும்... மௌலித் ஷரீஃபை எதிர்க்கும் பல கோடி ஊழல் முகமூடியும்!
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ، أَمَّا بَعْدُ...
அகிலங்களின் அருட்கொடை கண்மணி நாயகம் முஹம்மது ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு வருகை தந்த புனிதமிகு ரபீஉல் அவ்வல் மாதத்தின் வசந்தக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. நாடெங்கும் மீலாது விழாக்கள், மௌலித் ஷரீஃப் மஜ்லிஸ்கள், சீறா பயான்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இச்சூழலில், நமது ராஜபாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அமைப்பினர் தங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தரம் தாழ்ந்த ஒரு நாடகத்தை வெளியிட்டுள்ளார்கள். பல வருடங்கள் மார்க்கக் கல்வியைக் கற்று, பள்ளிவாசல்களில் நின்று சமுதாயப் பணியாற்றும் கண்ணியமிக்க உலமாக்களை... ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காகவும், பண சம்பாத்தியத்திற்காகவும் மௌலிதை உண்டாக்கியது போலவும்; மௌலிது நின்றுவிட்டால் 'ஐயையோ என் வருமானம் போச்சே! என் தொழிலே போச்சே!' என்று ஆலிம்கள் கைசேதப்பட்டுக் கதறிப் புலம்புவது போலவும் ஒரு கேவலமான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
இந்த ராஜபாளையத்தில் உள்ள உலமா சபையின் சார்பாக நடுநிலையோடு இரண்டு தரப்பினரின் உண்மை முகத்தையும், மௌலித் ஷரீஃபின் மார்க்க அடிப்படைகளையும் சமுதாயத்தின் முன் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
மார்க்கத்தைச் சொல்ல அருகதையற்றவர்கள்: ஒருவருக்கொருவர் போட்டுடைத்த உண்மைகள்!
உலமாக்களைப் பார்த்து "காசுக்காக மௌலித் ஓதுகிறார்கள்" என்று நாடகம் போடும் இந்தக் கூட்டத்தின் யோக்கியதை என்ன என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். நாங்கள் இவர்களைப் பற்றிக் குற்றம் சொல்லவில்லை; இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை உருவாக்கிய பி.ஜே என்பவரே இவர்களைப் பற்றி என்ன சொல்கிறார்?
"இன்றைக்கு மார்க்கத்தைச் சொல்வதற்கு எந்தத் தகுதியும் அருகதையும் இல்லாத ஒரு இயக்கம்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்! குறிப்பாக ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்களுக்கு மார்க்கத்தைப் பேச எந்தத் தகுதியும் கிடையாது" என்று அவரே வெளிப்படையாகப் பேசுகிறார்.
பதிலுக்கு TNTJ நிர்வாகிகள், "பி.ஜே ஒரு பெண்ணின் விவகாரத்தில் ஒழுக்கக் கேடான முறையில் மோசடி செய்து மாட்டிக்கொண்டவர்; எனவே அவருக்கு மார்க்கத்தைச் சொல்ல எந்த அருகதையும் இல்லை" என்று தூற்றுகிறார்கள்.
தங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் "உனக்கு மார்க்கத்தைச் சொல்ல அருகதை இல்லை, எனக்கு மார்க்கத்தைச் சொல்ல அருகதை இல்லை" என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டம்தான்... மார்க்கத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்து, சமுதாயத்தை வழிநடத்தும் ஆலிம்களைப் பார்த்து நாடகம் போட்டுப் பாடம் எடுக்கிறது! மார்க்கத்தைப் பேசவே தகுதியற்றவர்கள் என்று தங்களுக்குள்ளேயே நிரூபித்துக் கொண்டவர்கள், இன்றைக்கு மௌலிதை விமர்சித்து மார்க்கத்தில் குழப்பம் விளைவிக்கலாமா?
30 வீடியோக்களாக வெளிவந்த பல கோடி ஊழல் அம்பலங்கள்: 4 வருடங்களுக்கு முன்பே கிழிந்த முகமூடி!
இந்த ஊழல்களும் மோசடிகளும் ஏதோ இன்று நேற்று நடப்பது அல்ல! சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பே, இந்த இயக்கத்தை உருவாக்கியவரே இதிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, அவரே தன் சொந்த யூடியூப் சேனலில் பாகம் 1, பாகம் 2 என்று 30-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் போட்டு இவர்களின் பல கோடி ரூபாய் ஊழல்களையும் பகிரங்க ஆவணங்களையும் அக்குவேறு ஆணிவேறாக உடைத்துவிட்டார்:
சிறுவர்கள் இல்லம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி!
நிர்வாகச் செலவு, இதர செலவு, டீ செலவு என்று சொல்லி பல கோடிக் கணக்குகளைத் தங்களுக்குள்ளேயே போலி ஆவணங்களாக எழுதி ஏப்பமிட்ட மோசடிகள்!
ஜகாத், சதக்கத்துல் ஃபித்ரா மற்றும் சுனாமி நிதி வசூலில் பொதுமக்களுக்குக் கணக்குக் காட்டாத ஊழல்கள்!
இந்த ராஜபாளையத்திலேயே இவர்களால் அரங்கேற்றப்பட்ட ஒழுக்கக் கேடான செயல்பாடுகள் ஊரறிந்த உண்மை!
அவருக்குப் பிறகு அந்த இயக்கத்தில் இருந்து பெரிய பொறுப்பில் உள்ள முக்கியமான நபர்கள் யாரும் வெளியே வராத காரணத்தினால், பொதுமக்களுக்கு உண்மை தெரியாமல் இத்தனை வருடங்களாக அதே ஏமாற்று வேலைகளும் வசூல் மோசடிகளும் உள்ளுக்குள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன!
'நாங்கள் சமுதாய சேவை செய்கிறோம்' என்று முகமூடி போட்டுப் பொதுமக்களை முட்டாள்களாக்கி... நமது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் பொதுமக்களிடமும், நம்முடைய ஆலிம்களிடமுமே வந்து "அந்த சேவைக்குக் கொடுங்கள், இந்த நிதிக்குக் கொடுங்கள்" என்று பிச்சை எடுத்துச் சென்ற வரலாறும் அரங்கேறியிருக்கிறது!
இப்படிப்பட்ட பெரும் குற்றங்களையும் சமுதாய நாற்றங்களையும் சுமந்து கொண்டு திரியும் இந்தக் கூட்டம்தான்... இன்றைக்குப் பள்ளிவாசலில் சொற்ப ஊதியத்தில் தங்களை அர்ப்பணித்திருக்கும் கண்ணியமிக்க உலமாக்களைப் பார்த்து 'தொழில் செய்கிறார்கள்' என்று நாடகம் போடுகிறது!
நபிகளாரைத் தொட்டுப் பிரபலமாகும் வசூல் அரசியல்
இவர்கள் ஏன் எப்போது பார்த்தாலும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் புகழையும், மௌலித் மஜ்லிஸ்களையும் கொச்சைப்படுத்துகிறார்கள்?
நோக்கம் மிகத் தெளிவானது: 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைக் குறைத்துப் பேசினால்தான் சர்ச்சை கிளம்பும்; பப்ளிசிட்டி கிடைக்கும்; மக்கள் மத்தியில் தங்களை முன்னிலைப்படுத்திப் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தலாம்!' இளைஞர்களையும் பொதுமக்களையும் ஆலிம்களிடமிருந்து பிரித்து விட்டால், தங்களிடம் வந்து கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள், அதன் மூலம் நிதி வசூல் செய்யலாம் என்ற கேவலமான அரசியல் நோக்கம் மட்டுமே இதில் ஒளிந்திருக்கிறது.
மௌலித் மற்றும் மீலாது: வரைவிலக்கணம்
மீலாது (Milad): கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் புனிதமான பிறப்பைக் குறிக்கும்.
மௌலித் (Mawlid): நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு, உன்னதமான நற்குணங்கள், அற்புதங்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் மீதான ஸலவாத்துக்களை அரபு கவிதை மற்றும் உரை வடிவில் தொகுத்து ஓதப்படும் ஆக்கம்.
மௌலித் ஷரீஃபை தொழுகை, நோன்பு போன்ற ஒரு "ஃபர்ள்" (கட்டாயக் கடமை) என்றோ "வாஜிப்" என்றோ சுன்னத் வல் ஜமாஅத் ஒருபோதும் கூறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும், அவர்களின் புகழைப் பரப்புவதும் ஈமானின் பிரிக்க முடியாத அங்கம் என்பதால் அது நற்காரியமாகப் போற்றப்படுகிறது.
இரு தரப்பு ஒப்பீடு: மக்கள் சிந்திக்க வேண்டிய உண்மை
ஒருபுறம் (மறுப்பவர்கள்): மார்க்கத்தைச் சொல்ல அருகதையற்றவர்கள் என்று தங்களுக்குள்ளேயே சான்றிதழ் கொடுத்துக்கொண்டு, பல கோடி ரூபாய் வசூல் ஊழல்களில் சிக்கி, ஒழுக்கக் கேடுகளில் மாட்டிக்கொண்டு, 30 வீடியோக்களாகத் தங்கள் சொந்த ஊழல்களையே இணையத்தில் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் இயக்கக் கூட்டம். அவர்கள் சொல்கிறார்கள்: "நபியைப் புகழாதீர்கள், மௌலித் ஓதாதீர்கள், ஆலிம்களை மதிக்காதீர்கள்" என்று!
மறுபுறம் (உலமாக்கள்): பல நூறு ஆண்டுகளாகப் பாரம்பரிய கிதாபுகளைக் கற்றறிந்த மார்க்க அறிஞர்கள், பெரும் ஆன்மீகத் தந்தைகளாகத் திகழக்கூடிய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையினுடைய தலைவர், கண்ணியத்திற்குரிய உஸ்தாதுனா ஷைகுனா எஸ்.எஸ். ஹைதர் அலி ஹஸ்ரத் அவர்கள் முதற்கொண்டு, தமிழகத்தின் தலைசிறந்த பெரும் பெரும் ஆலிம்கள், முஃப்திகள் அனைவரும் ஏகோபித்துச் சொல்கிறார்கள்:
"கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ வேண்டும்! அவர்களைப் புகழ்ந்து புகழ்ந்து பாடி நெஞ்சங்களிலே நபிகளாரின் பிரியத்தை ஏற்ற வேண்டும்! அவர்களைப் பற்றி மீலாது விழாக்கள் எடுத்து, அவர்களின் உன்னதமான வாழ்க்கை வரலாறுகளைப் பச்சிளம் குழந்தைகள் வரை கொண்டு சேர்க்க வேண்டும்! உள்ளங்களில் நபிகளார் மீதான நேசத்தை வளர்ப்பதற்கு இதுவே மாபெரும் காரணமாக இருக்கும்!" என்று வழிகாட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் புகழ்பாடுதல்: சஹாபாக்களின் சுன்னத்
நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடுவது இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலத்திலிருந்தே சஹாபாக்கள் காட்டித்தந்த வழியாகும்.
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் வரலாறு:
மஸ்ஜிதுந் நபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்காக ஒரு பிரத்யேக மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள். அதில் நின்று கொண்டு அவர் ரசூல் (ஸல்) அவர்களின் புகழைப் பாடுவார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
إِنَّ اللَّهَ يُؤَيِّدُ حَسَّانَ بِرُوحِ الْقُدُسِ مَا يُفَاخِرُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ
(இன்னல்லாஹ யுஅய்யிது ஹஸ்ஸான பிரூஹில் குதுஸி மா யுஃபாஹிரு அன் ரசூலில்லாஹ்)
பொருள்: "ஹஸ்ஸான் அல்லாஹ்வின் தூதரின் புகழைப் பாடும் வரை, நிச்சயமாக அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்!"
(ஆதாரம்: ஸஹீஹ் அல்-புகாரி: 3213, திர்மிதி: 2846)
மேலும் நபிகளார் கூறினார்கள்:
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ
(லா யுஃமினு அஹதுகும் ஹத்தா அகூன அஹப்ப இலைஹி மின் வாலிதிஹீ வவலதிஹீ வன்னாஸி அஜ்மஈன்)
பொருள்: "தன் தந்தை, தன் பிள்ளைகள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் விட நான் ஒருவருக்கு மிக அன்பானவராக ஆகாதவரை அவர் உண்மையான முஃமினாக ஆக முடியாது!"
(ஆதாரம்: ஸஹீஹ் அல்-புகாரி: 15)
வரஃபஃனா லக்க திக்ரக்: மங்காத நபிகளாரின் புகழ்
எங்களை நீங்கள் என்னதான் கேவலப்படுத்தி நாடகம் போட்டாலும், வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தி விட்டான்:
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
(சூரா அல்-இன்ஷிராஹ்: 4)
பொருள்: "(நபியே!) உமது புகழை நாம் உமக்காக உயர்த்தி விட்டோம்!"
அல்லாஹ்வே உயர்த்திய பெருமானார் (ஸல்) அவர்களின் புகழையோ, சங்கையையோ எத்தகைய கேலி நாடகங்களாலும் யாராலும் ஒருபோதும் குறைத்துவிட முடியாது!
ஈமானின் அளவுகோல்: திருக்குர்ஆனின் எச்சரிக்கை
வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகக் கடுமையான ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்:
قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
(சூரா அத்-தவ்பா: 24)
பொருள்: "(நபியே!) நீர் கூறுவீராக: உங்களுடைய பெற்றோர்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவியரும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டமடைந்து விடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்புகின்ற வீடுகளும்... அல்லாஹ்வை விடவும், அவனுடைய தூதரை விடவும், அவனது பாதையில் போரிடுவதை விடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக ஆகிவிட்டால்... அல்லாஹ் தன் தண்டனையைக் கொண்டு வரும் வரை எதிர்பார்த்துக் காத்திருங்கள்! அல்லாஹ் பாவிகளான கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்!"
பொருளாதாரமும் வசூல் ஆசைகளும் கண்களை மறைத்து, நபி (ஸல்) அவர்களின் மீதான பாசம் குறைந்து போனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு நாம் ஆளாகிவிடுவோம்!
முடிவுரை: பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய தருணம்
ராஜபாளையம் வாழ் முஸ்லிம் பொதுமக்களே, நீங்களே நடுநிலையோடு முடிவெடுங்கள்:
பல கோடி ரூபாய் மோசடி செய்து, ஒழுக்கக் கேடுகளில் சிக்கி, கேவலமான நாடகங்களைப் போட்டுப் படம் காட்டும் கூட்டத்தின் பேச்சைக் கேட்கப் போகிறீர்களா? அல்லது சொற்ப ஊதியத்தில் தங்களை அர்ப்பணித்து, உங்கள் உள்ளங்களில் அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் உண்மையான பிரியத்தை ஊட்டத் துடிக்கும் தியாக உலமாக்களின் வழிகாட்டலை ஏற்கப் போகிறீர்களா?
உலமாக்களாகிய எங்களுக்கு உங்கள் சொற்பக் காசுகளுக்கு ஆசைப்பட வேண்டிய அவசியம் இல்லை; அல்லாஹ் எங்களைப் பார்த்துக் கொள்வான்! உங்கள் உள்ளங்களில் ஈமான் வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்!
எனவே, போலி நாடகங்களைப் புறந்தள்ளி, பள்ளிவாசல்களிலும் இல்லங்களிலும் கண்ணியத்தோடு நடைபெறும் மௌலித் ஷரீஃப் மற்றும் சீறா மஜ்லிஸ்களில் குடும்பத்தோடு பங்கெடுங்கள். ரசூல் (ஸல்) அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்துக்களை முழங்குங்கள்!
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் நபிகளாரின் நன்மதிப்பையும், உண்மையான அன்பையும், மறுமையில் அவர்களின் மேலான ஷஃபாஅத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்.
ஆக்கம் & வெளியீடு:
இராஜபாளையம் இத்திஹாதுல் உலமா சபை
No comments:
Post a Comment