பாவமன்னிப்பின் பத்து நாட்கள்
நாளும் ஒரு நபிமொழி 🌙 (ரமளான் சிறப்பு - நாள் 11)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
"யார் ரமளான் மாதத்தில் ஈமானுடனும் (இறைநம்பிக்கையுடனும்), நற்கூலியை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்."
(ஆதாரம்):
நூல்: ஸஹீஹ் புகாரி | எண்: 1901
அல்ஹம்துலில்லாஹ்! ரமளானின் முதல் பத்து நாட்களை (ரஹ்மத்) இனிதே நிறைவு செய்து, இன்று 'மஃபிரத்' எனப்படும் பாவமன்னிப்புக்கான இரண்டாவது பத்து நாட்களில் அடியெடுத்து வைக்கிறோம்.
நாம் இதுவரை செய்த சிறு, பெரு பாவங்களை நினைத்து வருந்தி, இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்க இதுவே மிகச் சிறந்த தருணம். ஈமானுடனும், அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்தும் நாம் வைக்கும் இந்த நோன்புகள், நமது முந்தைய பாவங்கள் அனைத்தையும் அழித்துவிடும் என நபிகளார் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளார்கள்.
இந்த இரண்டாவது பத்தில் அதிகமாக இஸ்திஃபார் (பாவமன்னிப்பு) செய்து, இறைவனின் முழுமையான மன்னிப்பைப் பெற்ற தூய்மையான அடியார்களாக நாம் மாற அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
விருதுநகர் மாவட்டம்
நோன்பு 11 முதல் 15 வரை (புதிய அட்டவணை)
🌙 ஸஹர் முடிவு: 4:57 AM | 🌞 இஃப்தார்: 6:33 PM
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி
இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜை.
▶️ YouTube: RAJAI AALIM MEDIA
No comments:
Post a Comment