Friday, 27 February 2026

(ரமலான் பிறை 8)ரமளான் இரவுத் தொழுகை (தராவீஹ்)


ரமளான் இரவுத் தொழுகை (தராவீஹ்)

நாளும் ஒரு நபிமொழி 🌙 (ரமளான் சிறப்பு - நாள் 08)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

"யார் ரமளான் மாதத்தில் ஈமானுடனும், (இறைவனிடம்) நற்கூலியை எதிர்பார்த்தும் (இரவுகளில்) நின்று வணங்குகிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்."
(ஆதாரம்):
நூல்: ஸஹீஹ் புகாரி | எண்: 2009

விளக்கம் 
ரமளான் மாதம் என்பது பகலில் பசியோடும், இரவில் விழிப்போடும் இறைவனை ஆராதிக்கும் ஒரு உன்னத மாதம். பகல் நேர நோன்பு முந்தைய பாவங்களை அழிப்பதைப் போலவே, இரவு நேரங்களில் நாம் நிறைவேற்றும் 'தராவீஹ்' மற்றும் 'தஹஜ்ஜுத்' போன்ற சுன்னத்தான தொழுகைகளும் நமது ஒட்டுமொத்தப் பாவங்களையும் அழித்து, இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத் தருகின்றன.
எனவே, இந்த ரமளான் இரவுகளை வீணான காரியங்களில் கழிக்காமல், இறைநம்பிக்கையோடும், அவனது நற்கூலியை ஆதரவு வைத்தவர்களாகவும் (இஹ்திஸாப்) தொழுது, துஆக்கள் செய்து பயனுள்ளதாக்கிக் கொள்வோம். அல்லாஹ் நம்முடைய இபாதத்களை ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்.


விருதுநகர் மாவட்டம்
நோன்பு 6 முதல் 10 வரை
🌙 ஸஹர் முடிவு: 4:59 AM | 🌞 இஃப்தார்: 6:32 PM
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி
இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜை.
▶️ YouTube: RAJAI AALIM MEDIA

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...