நாளும் ஒரு நபிமொழி 🌙
(ரமளான் சிறப்பு - நாள் 05)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً
"நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்; ஏனெனில், நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் (அருள்) இருக்கிறது."
(ஆதாரம்):
நூல்: ஸஹீஹ் புகாரி | எண்: 1923
நோன்பு நோற்பதற்காக அதிகாலையில் எழுந்து உண்ணும் ஸஹர் உணவு வெறும் பசியைப் போக்குவதற்காக மட்டுமல்ல, அது அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்கும் ஒரு சிறப்பான சுன்னத் ஆகும்.
ஒரு மிடறு தண்ணீரைக் குடித்தாவது ஸஹர் செய்வதை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் கூறியது போல் அந்த உணவிலும், அந்த நேரத்திலும் இறைவனின் மாபெரும் 'பரக்கத்' (அருள்) மறைந்திருக்கிறது.
அல்லாஹ் நம்முடைய நோன்புகளை இலகுவாக்கி, அவனது முழுமையான அருளைத் தந்தருள்வானாக! ஆமீன்.
2026 விருதுநகர் மாவட்டம்
நோன்பு 1 முதல் 5 வரை
🌙 ஸஹர் முடிவு: 5:02 AM | 🌞 இஃப்தார்: 6:32 PM
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி
இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜபாளையம்.
🔴 YouTube: RAJAI AALIM MEDIA
No comments:
Post a Comment