நாளும் ஒரு நபிமொழி 🌙
(ரமளான் சிறப்பு - நாள் 04)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ
"நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகம் வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள்."
(ஆதாரம்):
நூல்: ஸஹீஹ் புகாரி | எண்: 1902
ரமளான் முபாரக்! ✨ (நோன்பு - நாள் 04)
ரமளான் மாதம் என்பது வெறும் பசியோடும் தாகத்தோடும் இருப்பதற்கான மாதம் மட்டுமல்ல; இது ஈகையின் மாதம், தர்மத்தின் மாதம்.
நமது உயிருக்கு உயிரான நபி (ஸல்) அவர்கள், பொதுவாகவே மக்களிலேயே மிகப்பெரிய கொடைவள்ளலாகத் திகழ்ந்தார்கள். ஆனால், ரமளான் மாதம் வந்துவிட்டால், அவர்களின் தர்மம் இன்னும் பலமடங்கு அதிகரித்துவிடும்.
வீசுகின்ற காற்றை விட வேகமாக அவர்கள் நன்மைகளை வாரி வழங்குவார்கள் என்று ஹதீஸ்களில் காண்கிறோம்.
இந்த புனித மாதத்தில், ஏழைகள், உறவினர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளையும், தர்மங்களையும் (ஸதகா) அதிகமாகச் செய்வோம். நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றி, இறைவனின் அருளைப் பெறுவோம்!
2026 விருதுநகர் மாவட்டம்
நோன்பு 1 முதல் 5 வரை
🌙 ஸஹர் முடிவு: 5:02 AM | 🌞 இஃப்தார்: 6:32 PM
வழங்குபவர்:
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி
இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜபாளையம்.
🔴 YouTube: RAJAI AALIM MEDIA
No comments:
Post a Comment