நோன்பாளியின் சிறப்பும் கூலியும்
நாளும் ஒரு நபிமொழி 🌙 (ரமளான் சிறப்பு - நாள் 14)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيحِ الْمِسْكِ
"நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையானது, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விடவும் மிகச் சிறந்ததாகும்."
(ஆதாரம்):
நூல்: ஸஹீஹ் புகாரி | எண்: 1894
(நோன்பாளியின் சிறப்பு)
உலகத்தார் பார்வையில் பசியினால் ஏற்படும் நோன்பாளியின் வாய் வாடை ஒருவேளை சாதாரணமானதாகத் தெரியலாம். ஆனால், இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காக நோன்பு நோற்பவரின் அந்த வாடையைக் கூட, கஸ்தூரி மணத்தை விடச் சிறந்ததாக அல்லாஹ் மதிக்கிறான்.
இறைவனுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய தியாகமும் அவனிடம் மிக உயர்ந்த மதிப்பைப் பெறுகிறது என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு சிறந்த சான்று.
அல்லாஹ் நமது நோன்புகளை ஏற்று, அதன் முழுமையான நற்கூலிகளை நமக்கு வழங்கியருள்வானாக! ஆமீன்.
விருதுநகர் மாவட்டம் 2026
நோன்பு 11 முதல் 15 வரை
🌙 ஸஹர் முடிவு: 4:57 AM | 🌞 இஃப்தார்: 6:33 PM
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி
இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜை.
▶️ YouTube: RAJAI AALIM MEDIA
No comments:
Post a Comment