மன்னிப்பு கேட்போம் இறைவனின் அன்பை பெறுவோம்
அல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ்வின் மகத்தான மன்னிப்பும், கருணையும் பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடும் புனிதமிக்க ரமழான் மாதத்தின் அருள் நிறைந்த மூன்றாவது ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்
கண்கள் சிமிட்டும் நேரத்திற்குள் காலங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதோ, ரமலான் நம்மை விட்டு வெகுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. "நேற்றுதான் ரமலான் பிறந்தது போல் இருந்தது, அதற்குள் 15 நோன்புகள் கடந்துவிட்டன". இன்று நாம் 16-வது நோன்பில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.
மீதமிருக்கும் நாட்களோ மிகக் குறைவு. இந்தச் சில நாட்களை நாம் தவறவிட்டால், மீண்டும் ஒரு ரமலான் நமக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே! எனவே, இந்த மக்ஃபிராவின் (பாவமன்னிப்பு) நாட்களில் நாம் உறங்கிக் கிடக்கும் நம்முடைய 'தவ்பா'வின் வாசல்களைத் தட்டித் திறக்க வேண்டும். நம்முடைய பாவச் சுமைகளைக் கண்ணீரால் இறக்கி வைக்க வேண்டிய தருணம் இது.
ரமழானின் முப்பது நாட்களை மூன்று பிரிவாக பிரித்து முதல் பத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும், இரண்டாம் பத்தில் பாவ மன்னிப்பையும், மூன்றாமது பத்தில் நரக விடுதலையையும் வல்ல நாயனிடம் மன்றாடி கேட்க வேண்டுமென நபி {ஸல்} அவர்கள் கூறுவார்கள்.
ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவனுடைய வாழ்வில் அல்லாஹ்வின் மன்னிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஈருலகிலும் அல்லாஹ்வின் மன்னிப்பு அவனுக்கு கிடைக்க வேண்டுமென அவன் ஆசிப்பதும், நேசிப்பதும் ஈமானுக்கு அடுத்த படி மிக முக்கியமான ஒன்றாகும்.
சுருங்கச்சொன்னால் அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லையென்றால் அவனுடைய ஒட்டு மொத்த ( உலக, மண்ணறை, மறுமை ) வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியே!
அல்லாஹ்வின் மன்னிப்பு என்பது நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு ஒரு மகா சமுத்திரத்தைப் போன்றது. ஒரு அடியான் நன்மையை நோக்கி வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அல்லாஹ் தன் மன்னிப்பை வைத்திருக்கிறான். நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களை ஆதரித்து, உறவுகளைப் பேணி நடந்தால் அங்கே அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கிறது. நீங்கள் ஏழை எளியவர்களுக்குச் செய்யும் ஒரு சிறு தர்மம், உங்கள் மலை போன்ற பாவங்களை நீர் நெருப்பை அணைப்பதைப் போல அணைத்து விடுகிறது.
அதுமட்டுமல்ல, ஒரு முஃமினுக்கு ஏற்படும் சிறு கவலை, மனக்கஷ்டம், ஏன்... அவன் காலில் ஒரு முள் குத்தினால் கூட, அதைக் காரணமாக வைத்து அல்லாஹ் அவனது பாவங்களை மன்னிக்கிறான். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு நற்செயலையும் அல்லாஹ் நம்மைத் தூய்மைப்படுத்தும் வாய்ப்பாகவே கருதுகிறான். "என் அடியான் ஏதேனும் ஒரு காரணத்தால் தப்பித்து விடமாட்டானா? நான் அவனை மன்னித்து விடமாட்டேனா?" என்று அல்லாஹ் தன் மன்னிப்பின் வாசலை அகலத் திறந்து வைத்திருக்கிறான். இவ்வளவு விசாலமான கருணையை ரமலானின் இந்த மக்பிராவுடைய நாட்களில் நாம் ஏன் தேடக் கூடாது?
நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை
அல்லாஹ் நம்மை மன்னிப்பதற்கு இந்த ரமலானை நமக்கு தந்திருக்கிறான் இந்த ரமலானையும் நாம் வீணடித்து விட்டால் நம்மை விட துர்பாக்கியவான் யாரும் கிடையாது நபியவர்கள் சொல்லக்கூடிய ஹதீஸை பாருங்கள்..
رَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ
"எவனுக்கு ரமலான் மாதம் கிடைத்தும், அவன் தன் பாவங்களை மன்னிப்புப் பெறவில்லையோ அவன் அழிந்து போகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ செய்ய, நபியவர்கள் 'ஆமீன்' என்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)
அல்லாஹ்விடம் இருந்து மன்னிப்பு கிடைக்கவில்லையானால்….
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ ، فَقَالَ : " آمِينَ آمِينَ آمِينَ " . قِيلَ : يَا رَسُولَ اللهِ ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ : آمِينَ آمِينَ آمِينَ . قَالَ :
" إِنَّ جِبْرِيلَ أَتَانِي ، فَقَالَ : مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ ، قُلْ : آمِينَ ، فَقُلْتُ : آمِينَ . "
" وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا ، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ ، قُلْ : آمِينَ ، فَقُلْتُ : آمِينَ . "
" وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ ، قُلْ : آمِينَ ، فَقُلْتُ : آمِينَ "
حسن صحيح
رواه ابن خزيمة و ابن حبان في صحيحه و ابي يعلى الموصلي في مسنده و الطبراني في المعجم الأوسط و البيهقي في الشعب.
صححه الالباني رحمه الله في صحيح الترغيب و الترهيب (997) و الله أعلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே” என வினவப்பட்டது.
என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்தார். வந்தவர், “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும்” எனக் கூறிவிட்டு, ”ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் முதல் முறை “ஆமீன்” கூறினேன்.
“யார் தன்னுடைய பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் அவர்களுக்கு நன்மை செய்யாமல் இறந்து விட்டாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் இரண்டாவது முறையாக “ஆமீன்” கூறினேன்.
மேலும், “யாரிடம் தங்களது பெயர் கூறப்பட்டும் தங்களின் மீது ஸலவாத் சொல்லாத நிலையிலேயே மரணித்து விடுகின்றாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் மூன்றாவது முறையாக “ஆமீன்” கூறினேன்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: இப்னு குஸைமா )
குர்ஆன் காட்டும் இரு எல்லைகள்: யாருக்கு மன்னிப்பு உண்டு?
அல்லாஹ் தன் திருமறையில் யாருக்கு மன்னிப்பு உண்டு, யாருக்கு இல்லை என்பதை மிகத் தெளிவாக வரையறுக்கிறான்.
யாருக்கு மன்னிப்பு உண்டு? (அல்குர்ஆன் 4:17):
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ
"அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவாக (மரணத்திற்கு முன்னதாக) மன்னிப்புத் தேடுபவர்களுக்கு மட்டுமே அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. இத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கிறான்."
யாருக்கு மன்னிப்பு இல்லை? (அல்குர்ஆன் 4:18):
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ
"எவர் தீமைகளைச் செய்து கொண்டே இருந்து, இறுதியில் மரணம் நெருங்கிய போது 'நிச்சயமாக நான் இப்போது மன்னிப்புத் தேடுகிறேன்' என்று கூறுகிறாரோ, அவருக்கு மன்னிப்பு இல்லை."
விளக்கம்: மரணத் தருவாயில் மன்னிப்புத் தேடிய பிர்அவ்னைப் போல் ஆகிவிடாமல், மூச்சுக்காற்று இருக்கும்போதே அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதே அறிவுடையோர் செயல்.
மனித படைப்பாகிய நாம் படைத்த ரப்புக்கு மாற்றமான பாவமான காரியங்களை பகிரங்கமாகவும், இரகசியமாகவும், அறிந்தும் அறியாமலும், சிறிதும் பெரிதுமாக வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்கின்றோம்.
மனித சமூகமாகிய நாம் செய்கிற பாவமான செயல்களுக்காக உடனடியாக அல்லாஹ் தண்டிக்க நாடிவிட்டால் இந்த உலகத்தில் மனித சமூகம் என்கிற ஓர் படைப்பே இல்லாமல் போய் விடும்.
எனினும் அல்லாஹ் தன்னுடைய மன்னிப்பு எனும் பெருங் கருணையின் துணை கொண்டு நம்மை அரவணைத்து, வாழும் நாட்களை நீட்டித்து, செய்த பாவமான செயல்களில் இருந்து மீள்வதற்கான பாவமன்னிப்பு எனும் வாசலையும் திறந்து வைத்து நம்மீது பேருபகாரம் செய்திருக்கின்றான்.
அல்லாஹ் தான் மன்னிப்பாளன் என்பதை அல்குர்ஆனில் மூன்று விதமாக அடையாளப்படுத்துகின்றான்.
1. ஃகஃபூர் 2. ஃகாஃபிர், 3. ஃகஃப்ஃபார்
அல்குர்ஆனில் ஏறத்தாழ 5 இடங்களில் ஃகஃப்ஃபார் - - என்றும், ஒரு இடத்தில் ஃகாஃபிர் - - என்றும், 90 மேற்பட்ட இடங்களில் ஃகஃபூர் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ் அடியார்கள் செய்கிற பாவத்தை மன்னிப்பதோடு, ஈருலகத்திலும் மறைத்து அவர்கள் மீது அருள் புரிகின்றான்.
عن أنس بن مالك رضى الله عنه قال: سمعت رسول الله يقول: قال الله تعالى
(يا ابن آدَمَ إِنَّكَ مَا دَعَوتَنِى وَرَجَوتَنِى غَفَرتُ لَكَ عَلى مَا كَانَ مِنكَ وَلاَ أُبَالِى
يَا ابنَ آدَمَ لَو بَلَغَت ذُنُوبُكَ عَنَانَ السَّماءِ ثُمَّ استَغفَرتَنِى غَفَرتُ لَكَ
يَا ابنَ آدَمَ إِنَّكَ لَو أَتَيتَنِى بِقُرَابِ الأَرضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِى لا تُشرِكُ بِى شَيئاً لأَتَيتُكَ بقُرَابِها مَغفِرَةً). رواه الترمذى وقال: حديث حسن صحيح
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ் சொன்னதாக மாநபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
“ஆதமுடைய மகனே! நீ என் மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கின்றாய்! நான் உன் ஆதரவை ஏற்று உன் பாவங்களை மன்னித்து விடுகின்றேன்!
ஆதமின் மகனே! நீ வானத்தின் முகட்டை தொடும் அளவுக்கு பாவத்தோடு என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நான் மன்னித்து விடுவேன்!
ஆதமின் மகனே! எனக்கு இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம் வந்தாலும், நான் உன்னிடம் மன்னிப்பு எனும் பெரும் கருணையோடே உன்னை நான் நெருங்கி வருவேன்”. ( நூல்: திர்மிதீ )
உம்முடைய பாவத்தை விட அல்லாஹ்வின் மன்னிப்பு மிகப் பெரியது
وروي ان حبيب بن الحارث قال للنبي (صلى الله عليه وآله وسلم): إني مقراف للذنوب، قال: (فتب إلى الله يا حبيب، فقال: إني أتوب ثم أعود، فقال: كلما أذنبت فتب، حتى قال: عفو الله أكبر من ذنوبك يا حبيب).
ஹபீப் இப்னு ஹாரிஸ் (ரலி) என்கிற தோழர் மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் பாவத்தால் சூழப்பட்டிருக்கின்றேன்” என்று கூறினார். ஹபீபே! அல்லாஹ்விடம் தவ்பாச் செய் என்று நபி {ஸல்} அவர்கள் பதில் கூற, அல்லாஹ்வின் தூதரே! நான் தவ்பாச் செய்கிறேன், எனினும் மீண்டும் பாவம் செய்து விடுகின்றேனே” என்ன செய்ய அல்லாஹ்வின் தூதரே! என்று மீண்டும் வினவினார். அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “நீர் பாவம் செய்கிற போதெல்லாம் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து விடு” என்று கூறினார்கள்.
மீண்டும் அவர் இவ்வாறு கேட்கவே, “ஹபீபே! உம்முடைய பாவத்தை விட அல்லாஹ்வின் மன்னிப்பு மிகப் பெரியது” என்று பதிலளித்தார்கள். ( நூல்: அல் கபாயிர் )
وفي الحديث الطويل لأنس أن الأعرابي قال يا رسول الله من يلي حساب الخلق فقال الله تبارك وتعالى قال هو بنفسه قال نعم فتبسم الأعرابي فقال صلى الله عليه و سلم مم ضحكت يا أعرابي فقال إن الكريم إذا قدر عفا وإذا حاسب سامح فقال النبي صلى الله عليه و سلم صدق الأعربي ألا لا كريم أكرم من الله تعالى هو أكرم الأكرمين
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அண்ணலாரின் சபைக்கு ஒரு கிராமவாசி வந்தார். வந்தவர், அல்லாஹ்வின் தூதரே! படைப்புகளின் கேள்வி கணக்கை யார் கேட்பார்? என்று வினவினார். அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹ் தான் கேட்பான்” என்று கூறினார்கள்.
அப்போது, அவர் “அல்லாஹ் தானே, அவன் மட்டும் தானே கேள்வி கேட்பான்? என்று வினவினார். அதற்கு பெருமானார் {ஸல்} அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, அந்தக் கிராமவாசி புன்னகைத்தார். அதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “எதற்காக நீர் சிரித்தீர்?” என வினவினார்கள்.
அப்போது, அந்தக்கிராமவாசி “கண்ணியமானவன் என்றால் யார் தெரியுமா? அனைத்துக்கும் சக்தியிருந்தும் மன்னிப்பான்! விசாரணை மேற்கொண்டால் கண்டும் காணாமல் நடந்து கொள்வான்” என்றார்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “கிராமவாசி உண்மையே சொன்னார்! அல்லாஹ்வை விட கண்ணியமானவன் எவருமில்லை. அவன் கண்ணியமானவர்களில் எல்லாம் மிகவும் கண்ணியமானவன்” என்று பதில் கூறினார்கள். ( நூல்: அல்கபாயிர் )
ஆச்சர்யமூட்டும் ( தவ்பா ) பாவமன்னிப்பு….
و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى وَهُوَ ابْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ عَنْ غَيْلَانَ وَهُوَ ابْنُ جَامِعٍ الْمُحَارِبِيُّ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ
جَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا كَانَتْ الرَّابِعَةُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ فِيمَ أُطَهِّرُكَ فَقَالَ مِنْ الزِّنَى فَسَأَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبِهِ جُنُونٌ فَأُخْبِرَ أَنَّهُ لَيْسَ بِمَجْنُونٍ فَقَالَ أَشَرِبَ خَمْرًا فَقَامَ رَجُلٌ فَاسْتَنْكَهَهُ فَلَمْ يَجِدْ مِنْهُ رِيحَ خَمْرٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَزَنَيْتَ فَقَالَ نَعَمْ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَكَانَ النَّاسُ فِيهِ فِرْقَتَيْنِ قَائِلٌ يَقُولُ لَقَدْ هَلَكَ لَقَدْ أَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ وَقَائِلٌ يَقُولُ مَا تَوْبَةٌ أَفْضَلَ مِنْ تَوْبَةِ مَاعِزٍ أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ فِي يَدِهِ ثُمَّ قَالَ اقْتُلْنِي بِالْحِجَارَةِ قَالَ فَلَبِثُوا بِذَلِكَ يَوْمَيْنِ أَوْ ثَلَاثَةً ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ جُلُوسٌ فَسَلَّمَ ثُمَّ جَلَسَ فَقَالَ اسْتَغْفِرُوا لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالُوا غَفَرَ اللَّهُ لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهُمْ قَالَ ثُمَّ جَاءَتْهُ امْرَأَةٌ مِنْ غَامِدٍ مِنْ الْأَزْدِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكِ ارْجِعِي فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ فَقَالَتْ أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كَمَا رَدَّدْتَ مَاعِزَ بْنَ مَالِكٍ قَالَ وَمَا ذَاكِ قَالَتْ إِنَّهَا حُبْلَى مِنْ الزِّنَى فَقَالَ آنْتِ قَالَتْ نَعَمْ فَقَالَ لَهَا حَتَّى تَضَعِي مَا فِي بَطْنِكِ قَالَ فَكَفَلَهَا رَجُلٌ مِنْ الْأَنْصَارِ حَتَّى وَضَعَتْ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ وَضَعَتْ الْغَامِدِيَّةُ فَقَالَ إِذًا لَا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا لَيْسَ لَهُ مَنْ يُرْضِعُهُ فَقَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ إِلَيَّ رَضَاعُهُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ فَرَجَمَهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّهُ إِيَّاهَا فَقَالَ مَهْلًا يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ..
விபச்சாரக் குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டால் அது தண்டனை வழங்கும் அளவிற்கான குற்றம் என்பதாக அல்லாஹ் இறைவசனத்தை இறக்கியருளியிருந்த தருணம் அது…
புரைதா, இப்னு அப்பாஸ், அனஸ் ( ரலி – அன்ஹும் ) அறிவிக்கின்றார்கள்:
பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த மாஇஸ் இப்னு மாலிக் என்கிற நபித்தோழர் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டும் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
மீண்டும் வந்து முறையிடவே, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு கூறி மாயிஸ் (ரலி) அவர்களை நபி {ஸல்} அனுப்பி வைத்தார்கள்.
இவ்வாறு, அவர் மூன்று முறை அண்ணலாரின் சபைக்கு வருவதும், செல்வதுமாக இருந்தார்.
நான்காவது முறையாக முன்பு போல் அவர் அவ்வாறு கூறவே அவரை நோக்கி அண்ணலார் {ஸல்} அவர்கள் ”(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!” என்றார்கள்.
ஆனால், அவரோ முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ”உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார்.
ஆனால், அவரோ மீண்டும் முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, அருகில் இருந்த நபித்தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “இவர் மது அருந்தி இருக்கிறாரா?” என்று பரிசோதித்துப் பாருங்கள்” என்றார்கள்.
பரிசோதித்த நபித்தோழர்கள் “இல்லை, இவர் மது அருந்த வில்லை” என்று பதில் கூறினார்கள்.
இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சாடைமாடையாகக் கேட்காமல் ”அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ”ஆம்'” என்று கூறினார்.
அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
பெருநாள் தொழுகைத் திடல் அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அப்போது, நபி (ஸல்) அவர்கள் ”அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்”.
மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் அல்ல.
மாறாக, தான் செய்த தண்டனைக்குரிய குற்றத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் உள்ளத்தில் வெளிப்பட்ட தக்வா - இறையச்சம்தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகம் நோக்கி இழுத்து வந்தது.
அங்கே, மாயிஸ் (ரலி) குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை கேட்டபோது, மாயிஸ் (ரலி) அவர்களின் இறையச்சத்தை அறிந்த நபியவர்கள்,
”போய் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்” என்றார்கள். பின்னர், உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், இவர் மது குடித்திருக்கின்றாரா? என பரிசோதிக்கச் சொல்கின்றார்கள்.
பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம்; அல்லது ஆசையோடு பார்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ் (ரலி) அவர்களை திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றார்கள்.
ஆனாலும், மாயிஸ் (ரலி) அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்.
தான் செய்த பாவத்தை தம்மைத் தவிர யாருமே பார்க்காத போதும், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சத்தால் உந்தப்பட்டு, வேதனை மிகுந்த தண்டனையை ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ் (ரலி) அவர்களை பொருந்திக் கொள்வானாக!
இந்த தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில் அண்ணலாரையும், நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில் நடந்தேறியது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.
வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடு “நீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ”ஆம்” என்றார்.
அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து “இது நான் பெற்றெடுத்த குழந்தை” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டது” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.
அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.
பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.
அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.
அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.
இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.
பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.” என்று கூறினார்கள்.
பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.
அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.
( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )
தன் கண் முன்னால் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட, தான் செய்த விபச்சார குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றுமாறு ஒரு பெண்மணி பெருமானார் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்தின் முன் வந்து நின்றார்கள் என்றால் அந்தப் பெண்மணியை அங்கு வந்து நிறுத்தியது தக்வா எனும் இறையச்சம் தான்.
அவர் செய்த குற்றத்தை அவரைத் தவிர வேறெவரும் பார்க்கவில்லை எனும் போது, தனக்கு முன்பாக ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட அந்த தண்டனையை வழிய வந்து ஏற்றுக் கொண்டார் எனில் அவரின் இறையச்சத்தை எந்த உரைகல் வைத்து உரசிப்பார்ப்பது.
இந்த இரு செய்திகளையும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் ஷரீஃபில் கிதாபுல் ஹுதூத் பாடத்தில், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா எனும் பாபில் ஒரே ஹதீஸாகப் பதிவு செய்திருப்பார்கள்.
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நபி {ஸல்} அவர்கள் அப்பெண்மணியிடம் “ஆச்சர்யத்தோடு “நீயா அது?” என்று கேட்ட அந்த அமைப்பும், அதற்கு அப்பெண்மணி ”ஆம்” என்று கூறிய விதமும்” மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களோடு தவறான உறவில் ஈடுபட்ட பெண் இவர் தான்” என்று கூறுகின்றார்கள்.
சம்பவம்: மூஸா (அலை) மற்றும் அந்த ஒற்றை மனிதனின் தவ்பா
சூழல்:
மூஸா (அலை) அவர்கள் காலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. மக்கள் அனைவரும் பசியாலும் தாகத்தாலும் தவித்தனர். மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக மழை வேண்டி துஆ செய்யுங்கள்" என்றார்கள்.
மைதானத்தில் நடந்த அதிசயம்:
மூஸா (அலை) அவர்கள் சுமார் 70,000 மக்களை அழைத்துக் கொண்டு ஒரு மைதானத்திற்குச் சென்றார்கள். அங்கு நின்று கையேந்தி, "யா அல்லாஹ்! எங்களுக்கு மழையைத் தந்து அருள் செய்" என்று துஆ செய்தார்கள். ஆனால் வானம் இன்னும் வெறிச்சோடியே இருந்தது, வெயில் அதிகரித்தது.
அல்லாஹ்வின் பதில்:
அப்போது அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்கு வஹீ அறிவித்தான்: "மூஸாவே! உங்கள் கூட்டத்தில் ஒரு மனிதன் இருக்கிறான். அவன் கடந்த 40 ஆண்டுகளாக எனக்கு மாறுசெய்து பாவம் செய்து கொண்டிருக்கிறான். அவன் இந்த இடத்தை விட்டு வெளியேறாத வரை நான் மழையைத் தரமாட்டேன். அவனுடைய பாவத்தால்தான் மழை தடுக்கப்பட்டுள்ளது."
மூஸா (அலை) அவர்களின் அறிவிப்பு:
மூஸா (அலை) அவர்கள் உரத்த குரலில் அறிவித்தார்கள்: "40 ஆண்டுகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்த அந்த மனிதனே! இங்கிருந்து வெளியேறு. உன்னால் தான் எங்களுக்கு மழை தடுக்கப்பட்டுள்ளது."
அந்த மனிதனின் மனநிலை (தவ்பா):
அந்த மனிதன் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் நகரவில்லை. தான் தான் அந்தப் பாவி என்பதை அவன் உணர்ந்தான். அவன் யோசித்தான்: "இப்போது நான் வெளியேறினால் 70,000 பேருக்கு முன்னால் நான் அவமானப்படுவேன். வெளியேறாவிட்டால் மக்கள் தாகத்தால் மடிவார்கள்."
அவன் உடனே தன் முகத்தை ஆடையால் மூடிக்கொண்டு, இதயத்தின் ஆழத்திலிருந்து அல்லாஹ்விடம் பேசினான்:
"யா அல்லாஹ்! 40 ஆண்டுகள் நான் உனக்கு மாறு செய்தேன், அப்போதெல்லாம் நீ என்னை மறைத்தாய் (அவமானப்படுத்தவில்லை). இன்று நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுத் திரும்புகிறேன், என்னை இன்று மட்டும் அவமானப்படுத்திவிடாதே அல்லாஹ்!"
மழை பொழிந்தது:
அவன் தன் இதயத்தில் இந்தத் தவ்பாவைச் செய்து முடித்த அடுத்த நொடி, வானில் மேகங்கள் கூடின, பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
மூஸா (அலை) அவர்களின் ஆச்சரியம்:
மூஸா (அலை) அவர்கள் கேட்டார்கள்: "யா அல்லாஹ்! அந்தப் பாவி யாரும் வெளியேறவில்லையே, பிறகு எப்படி மழை பெய்தது?"
அல்லாஹ் பதிலளித்தான்: "மூஸாவே! எவனுக்காக மழையைத் தடுத்தேனோ, அவனுடைய தவ்பாவைக் கொண்டே இப்போது மழையைத் தந்துள்ளேன்!"
மூஸா (அலை) கேட்டார்கள்: "யா அல்லாஹ்! அந்த மனிதனை எனக்குக் காட்டு, நான் அவரைப் பார்க்க வேண்டும்."
அல்லாஹ் சொன்னான்: "அவன் பாவம் செய்தபோதே நான் அவனைப் பிறருக்குக் காட்டிக் கொடுக்கவில்லை (மறைத்து வைத்தேன்). இப்போது அவன் என்னிடம் வந்துவிட்டான், அவனை நான் எப்படிக் காட்டிக் கொடுப்பேன்?"
பயானில் நீங்கள் சொல்ல வேண்டிய பாடம் (Message):
தனிமைத் தவ்பா: நீங்கள் கேட்டது போல, சபையில் இருந்து கொண்டே அவன் ரகசியமாகச் செய்த தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். பாவமன்னிப்புக்கு மேடை தேவையில்லை, இதயத்தின் விம்மல் போதும்.
அல்லாஹ்வின் 'சத்தார்' (மறைப்பவன்) குணம்: நாம் செய்யும் எத்தனையோ ரகசியப் பாவங்களை அல்லாஹ் பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான். அந்த நன்றிக்காகவாவது நாம் அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சமூகத்தின் மீது ஒருவரின் தாக்கம்: ஒரு பாவியால் மழை தடுக்கப்படலாம் என்றால், ஒருவரின் உண்மையான தவ்பாவால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விமோசனம் கிடைக்கலாம்.
ஆதாரக் குறிப்பு:நூல்: கிதாபுத் தவ்வாபீன் (Kitab at-Tawwabbin)
ஆசிரியர்: இமாம் இப்னு குதாமா அல்-மக்டிஸி (ரஹ்)
சம்பவம்: ஸஃலபா (ரலி) அவர்களின் மரணத்தை வென்ற தவ்பா
1. பார்வையும் பதற்றமும்
ஸஃலபா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்த ஒரு இளம் சஹாபி. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அவரை ஒரு வேலை நிமித்தமாக வெளியே அனுப்பி வைத்தார்கள். அவர் ஒரு அன்சாரித் தோழரின் வீட்டின் வழியாகச் செல்லும்போது, காற்று வீசியதில் அந்த வீட்டின் திரை விலகியது. அப்போது தற்செயலாக உள்ளே ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதை அவரது கண்கள் பார்த்துவிட்டன.
2. நயவஞ்சகனாகி விட்டேனோ என்ற பயம்
பார்த்த மறுநொடியே அவர் பார்வையைத் திருப்பிக் கொண்டார். ஆனால், "நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு நம்பிக்கையான ஆளாகத் தானே அனுப்பினார்கள், நான் இப்படி ஒரு துரோகத்தைச் செய்துவிட்டேனே! என் மீது வஹீ இறங்கி நான் ஒரு நயவஞ்சகன் (முனாஃபிக்) என்று அல்லாஹ் அறிவித்து விடுவானோ?" என்ற பயம் அவரை ஆட்கொண்டது.
3. மலைப்பகுதிக்கு ஓடுதல்
பயத்தில் அவர் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வரவில்லை. மதீனாவிற்கும் மக்காவிற்கும் இடையே உள்ள மலைப்பகுதிக்கு ஓடிச் சென்று, ஒரு குகையில் அமர்ந்து நாற்பது நாட்கள் அழுது கொண்டே திக்ரு செய்து மன்னிப்புத் தேடினார்.
4. தேடுதல் வேட்டை
நாற்பது நாட்களுக்குப் பிறகு, ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "உமது உம்மத்தில் ஒரு மனிதர் மலைப்பகுதியில் என்னிடம் பாதுகாப்புத் தேடிக்கொண்டிருக்கிறார்" என்று அல்லாஹ்வின் செய்தியைச் சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) மற்றும் ஸல்மான் பார்ஸி (ரலி) ஆகியோரை அனுப்பி அவரைத் தேடி வரச் சொன்னார்கள்.
5. உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தல்
மதீனாவின் எல்லையில் ஒரு இடையனிடம் உமர் (ரலி) விசாரித்தபோது, அவன் சொன்னான்: "ஒவ்வொரு இரவும் ஒரு இளைஞன் மலையிலிருந்து கீழே வருவான். தலையில் கையை வைத்துக்கொண்டு 'யா அல்லாஹ்! என் உயிரை நீ கைப்பற்றிக் கொள், நான் உனக்கு மாறு செய்துவிட்டேன்' என்று கதறி அழுவான். அவன் அழுகையைப் பார்த்து என் ஆடுகளே மேயாமல் அழும்" என்றான்.
உமர் (ரலி) அவர்கள் அவரைப் பிடித்துக்கொண்டு மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள். அப்போது அவர் கேட்ட ஒரே கேள்வி: "உமரே! என் பாவத்தைப் பற்றி வஹீ (இறைச்செய்தி) ஏதும் இறங்கியதா? நான் முனாஃபிக் என்று அல்லாஹ் சொல்லிவிட்டானா?" என்று துடித்தார்.
6. நபி (ஸல்) அவர்களின் மடியில் மரணம்
அவரை நபி (ஸல்) அவர்களின் அவைக்கு அழைத்து வந்தார்கள். அவர் அழுதபடியே இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தன் மடியில் கிடத்தினார்கள். ஸஃலபா (ரலி) சொன்னார்: "அல்லாஹ்வின் தூதரே! பாவியான என் தலை உமது பரிசுத்தமான மடியில் இருக்கத் தகுதியற்றது" என்று நகர்ந்தார்.
நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: "உனக்கு என்ன நோய்?"
அவர் சொன்னார்: "என் பாவங்கள் என் இதயத்தை அரித்துக் கொண்டிருக்கின்றன."
அடுத்த சில நிமிடங்களில் அவர் நபி (ஸல்) அவர்களின் மடியிலேயே உயிர் நீத்தார். அவர் இறந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "ஸஃலபா இறந்த பிறகு, வானவர்கள் கூட்டமாக இறங்கி வந்து அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதைக் கண்டேன். அந்த அளவுக்கு அல்லாஹ் அவரை மன்னித்து நேசித்தான்."
இந்தச் சம்பவத்திலிருந்து நீங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்கள்:
பாவத்தைப் பற்றிய பயம்: பாவம் செய்வது மனித இயல்பு, ஆனால் அந்தப் பாவத்தை எண்ணி உருகி அழுவதுதான் ஒரு முஃமினின் அடையாளம்.
அல்லாஹ்வின் கருணை: ஒரு சிறிய தவறுக்காக ஒருவன் 40 நாட்கள் அழுதால், அல்லாஹ் அவனைப் பரிசுத்தமாக்கி விடுகிறான்.
மக்ஃபிரா காலம்: இந்த ரமலானின் இரண்டாவது பத்தில், நாமும் ஸஃலபா (ரலி) போல நம் பாவங்களை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் வடித்தால், நம் மரணமும் கண்ணியமானதாக இருக்கும்.
ஆதாரக் குறிப்பு:
இந்தச் சம்பவம் தப்ரானி (அல்-முஃஜமுல் கபீர்) மற்றும் இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்களின் 'ஸஃபதுஸ் ஸஃப்வா' போன்ற நூல்களில் விரிவாகக் கிடைக்கிறது.
அல்லாஹ்வின் மன்னிப்பின் பேரெல்லை
பாவமன்னிப்பு கேட்கும் அடியானும் அல்லாஹ்வின் 'லப்பைக்'கும்
ஒருமுறை ஒரு சஹாபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனின் கருணையைப் பற்றி வினவினார். அப்போது இந்த நுட்பமான செய்தி விளக்கப்பட்டது:
நற்காரியம் செய்பவர்: ஒரு அடியான் நற்காரியங்களைச் செய்துவிட்டு (உதாரணமாகத் தொழுதுவிட்டு அல்லது தர்மம் செய்துவிட்டு) "யா அல்லாஹ்" என்று அழைத்தால், அல்லாஹ் "லப்பைக் யா அப்தி" (இதோ வந்துவிட்டேன் என் அடியானே) என்று ஒருமுறை பதிலளிக்கிறான்.
தொடர் வணக்கசாலி: எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆபித் (வணக்கசாலி) "யா அல்லாஹ்" என்று அழைத்தால், அல்லாஹ் அப்போதும் "லப்பைக் யா அப்தி" என்று அன்போடு பதிலளிக்கிறான்.
பாவம் செய்த அடியான் (முஜ்ரிம்): ஆனால், ஒரு பாவி... தன் பாவங்களை நினைத்து வெட்கி, தலைகுனிந்து, கண்களில் கண்ணீரோடு கையேந்தி, நடுக்கத்தோடு "யா... அல்லாஹ்..." என்று அழைக்கும்போது, அல்லாஹ் "லப்பைக்! லப்பைக்! லப்பைக்!" (இதோ வந்துவிட்டேன்! இதோ வந்துவிட்டேன்! இதோ வந்துவிட்டேன்!) என்று மூன்று முறை பதிலளிக்கிறான்.
இதற்கான காரணம்:
வானவர்கள் ஆச்சரியப்பட்டு, "யா அல்லாஹ்! உனக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கு ஒருமுறை பதில் சொன்னாய், ஆனால் உனக்கு மாறு செய்த பாவிக்கு ஏன் மூன்று முறை 'லப்பைக்' என்று சொல்கிறாய்?" எனக் கேட்பார்கள்.
அதற்கு ரஹ்மான் சொல்லுவான்:
"என்னைக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் தங்களின் நற்செயல்களின் மீது நம்பிக்கை வைத்து என்னை அழைக்கிறார்கள். ஆனால் இந்தப் பாவி, தன் செயல்கள் அனைத்தையும் இழந்து, என்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற முழுமையான நம்பிக்கையோடு (ஆதரவோடு) என்னை அழைக்கிறான். அவனது அந்த நம்பிக்கையை நான் வீணாக்க விரும்பவில்லை."
அல்லாஹ் நம்மைத் தண்டிப்பதை விட மன்னிப்பதையே அதிகம் விரும்புகிறான் என்பதை இந்த வசனம் மற்றும் ஹதீஸ் மூலம் நிலைநாட்டுங்கள்.
ஆயத் (குர்ஆன் 39:53):
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا
"என் அடியார்களே! உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான்."
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் (ஸஹீஹ் முஸ்லிம்: 2749):
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தபோது, தன் கைப்பட ஒரு ஏட்டில் எழுதினான்: 'நிச்சயமாக எனது ரஹ்மத் (அருள்), எனது கோபத்தை மிகைத்துவிட்டது'
(إِنَّ رَحْمَتِي غَلَبَتْ غَضَبِي)."
"கண்ணியத்திற்குரியவர்களே! இதோ ரமலான் பாதி முடிந்துவிட்டது. 15 நாட்கள் நம்மை விட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டன. காலம் மின்னலைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. மரணத்தின் தூதுவன் நம் வாசலைத் தட்டும் முன், நம் பாவக்கறைகளைத் துடைக்க அல்லாஹ் கொடுத்திருக்கும் இந்த 'மக்ஃபிரா' எனும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இன்று இரவு நம் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு, யாருமே பார்க்காத நேரத்தில் அல்லாஹ்விடம் கையேந்துவோம். 'யா அல்லாஹ்! பாவியாக உன்னிடம் வருகிறேன், பரிசுத்தமானவனாக என்னை மாற்றாமல் மரணிக்கச் செய்துவிடாதே' என்று கதறுவோம். அந்த ஒற்றைச் சொட்டுக் கண்ணீர் நம் நரக நெருப்பை அணைக்கப் போதுமானது.
துஆ: > اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
(யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன், மன்னிப்பதையே விரும்புபவன், எனவே என்னை மன்னித்து அருள்வாயாக!)"
துஆ:
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
(எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.)"

No comments:
Post a Comment