பத்ரு சஹாபாக்களின் மகத்துவம்
நாளும் ஒரு நபிமொழி 🌙 (ரமளான் சிறப்பு - நாள் 17)
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள்:
"உங்களில் பத்ரு போரில் கலந்துகொண்டவர்களை எத்தகையவர்களாகக் கருதுகிறீர்கள்?" அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"முஸ்லிம்களில் அவர்கள் மிகச் சிறந்தவர்கள்."
(அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள்:
"இதே போன்றே வானவர்களிலும் பத்ரு போரில் கலந்துகொண்டவர்கள் மற்ற வானவர்களை விடச் சிறந்தவர்கள்" எனக் கூறினார்கள்).
(ஆதாரம்):
நூல்: ஸஹீஹ் புகாரி | எண்: 3992
(பத்ரு - சத்தியத்தின் வெற்றி)
இன்று ரமளான் 17, இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையான பத்ரு போர் நிகழ்ந்த தினம். வெறும் 313 பேராக வந்து, ஈமானின் வலிமையால் மகத்தான வெற்றியைப் பெற்ற அந்த உத்தமத் தோழர்களை (அஹ்லுல் பத்ர்) பற்றி நபி (ஸல்) அவர்கள் "மிகச் சிறந்தவர்கள்" என்று சான்று பகர்ந்துள்ளார்கள்.
இந்த மகத்தான நாளில், அந்த சஹாபாக்களின் தியாகங்களை நினைவு கூர்வோம்.
யா அல்லாஹ்! அந்த உத்தமத் தோழர்களின் பொருட்டால் (வஸீலாவால்) எங்கள் கவலைகளை நீக்கி, எங்கள் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக! ஆமீன்.
என்றும் தங்கள் துஆவை ஆதரவு வைக்கும்
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி
இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜை.
▶️ YouTube: RAJAI AALIM MEDIA
No comments:
Post a Comment